பக்க வாதம் மற்றும் மாரடைப்பால் அவதியுற்ற நான்கு நோயாளிகளுக்கு  அதிநவீன உயிர்காக்கும் சிகிச்சை

 

 

 

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓஎம்ஆர்) உள்ள அப்பல்லோ பல்நோக்கு மருத்துவமனை, ஒரே நேரத்தில் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகளுக்கு அதிநவீன உயிர்காக்கும் சிகிச்சை முறைகளை மேற்கொண்டு அவர்களைக் காப்பாற்றி மற்றொரு மைல் கல் சாதனையை எட்டியுள்ளது. இடையீட்டு நரம்பியல் சிகிச்சை நிபுணர் [டாக்டர் கார்த்திகேயன் Dr. Karthikeyan, Interventional Neurologist], சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ பல்நநோக்கு மருத்துவமனையின் இடையீட்டு இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் இ.டி. அருள் [Dr. Arul E.D, Interventional Cardiologist] ஆகியோர் இணைந்து இந்த சவாலான சிகிச்சையைச் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

குருதியோட்டக்குறை இதய நோய்களை அடுத்து இரண்டாவதாக அதிக மரணங்களை ஏற்படுத்தும் அல்லது இயலாமையை ஏற்படுத்தும் காரணியாக பக்கவாதம் உள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், கோல்டன் ஹவர்ஸ் (உயிர்க்காக்கும் பொன்னான நேரம்) எனப்படும் குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டால் அதன் தாக்கத்தையும் விளைவுகளையும் தவிர்க்க இயலும். பக்கவாதமும் மாரடைப்பும் இணைந்து வருவது மிகவும் விரும்பத்தகாததாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் உள்ளது. மாரடைப்பு மற்றும் குருதியோட்டக்குறை பக்கவாதம் ஆகியவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே காரணிகளான உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு அளவுகள், உடற்பயிற்சி இன்மை, உடல் பருமன், புகைபிடித்தல் போன்ற காரணங்களால் ஏற்படுகின்றன.

மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றங்கள், மாறிவரும் உணவுப் பழக்கங்கள் போன்றவையும் மூளை மற்றும் இதய நோய்களுக்கு முக்கியக் காரணிகளாகின்றன. ஒருநாளில் 12 முதல் 14 நேரம் வரையில் பணி செய்து ஓய்வு இல்லாத வாழ்க்கை முறை, இரவுப் பணி அல்லது தூக்கத்தை இழக்கும் வகையிலான பணிகள் போன்றவற்றால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் கூடுதலாக அவர்கள் தேவையற்ற உணவுகளை உட்கொள்ளுதல், மது அருந்துதல், புகைப்பிடித்தல் உள்ளிட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாதல் போன்றவற்றால் மேலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இளைஞர்கள் மத்தியில் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு இவை முக்கியக் காரணிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. மற்றொருபுறம் மரபு காரணிகள், உறைதல் குறைபாடுகள், வாஸ்குலிட்டிஸ் எனப்படும் ரத்த நாள அழற்சி உள்ளிட்டவையும் பிற காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இடையீட்டு நரம்பியல் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ மருத்துவமனையின் இடையீட்டு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் இ.டி. அருள் ஆகியோர் இணைந்து, ஒரே நேரத்தில் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவருக்கு, சிக்கலான சிகிச்சை முறைகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

திரு. உக்ரமூர்த்தி, 83 வயதான நோயாளி. கால்கள் பலவீனமான நிலையில், மார்பு வலியுடன் அப்பல்லோவிற்கு அழைத்து வரப்பட்டார். இதயத்தில் அடைப்பு இருப்பதால் அவர் அவதிப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. மேலும் அவருக்கு பக்கவாதத்தின் அறிகுறிகள் இருப்பதும் மருத்துவ பரிச்சோதனியில் தெரிய வந்தது. அவரது இதயத்தில் உள்ள இரத்த நாளத்தில் உறைந்திருக்கும் அடைப்பை 15 முதல் 20 நிமிடங்களுக்குள் அகற்ற வேண்டியிருந்தால் டாக்டர்கள் ஆஞ்சியோபிளாஸ்டி செய்தனர். அதையடுத்து உடனடியாக அவரது மூளையில் இருந்து உறைந்திருக்கும் அடைப்பை அகற்ற இயந்திர த்ரோம்பக்டமி [mechanical Thrombectomy] மருத்துவ நடைமுறையை மேற்கொண்டனர். இதன் மூலம் மருத்துவர்கள் திரு. உக்ரமூர்த்தியின் உடல்நிலையை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்தனர். இது போன்ற நிகழ்வு மிகவும் அரிதாக நிகழும் அபாயகரமான ஒன்றாகும். அவரது உறுப்பு இரண்டையும் காப்பாற்ற நாங்கள் மிகவும் கடினமான முயற்சியை மேற்கொண்டோம். எங்களது முயற்சியின் பலனாக அவர் தனது அறிகுறிகளிலிருந்து முற்றிலும் மீண்டு இருக்கிறார்.

குறுகிய கால இடைவெளியில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய இரண்டினாலும் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (அனைத்து மருத்துவ நடைமுறைகளும் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் செய்யப்பட்டன)

திரு. டேனியல் 64 வயதான நோயாளி. இவருக்கு இடது மேல் மூட்டு மற்றும் கீழ் மூட்டு இரண்டு பகுதிகளிலும் திடீரென பலவீனம் ஏற்பட்டது. மேலும் லேசான மார்பு வலியால் அவர் அவதிப்பட்டு கொண்டிருந்தார். இவருக்கு பக்கவாதத்தால் கடுமையான மாரடைப்பு [acute myocardial infarction] ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இதனால் நோயாளி உடனடியாக கேத் ஆய்வகத்திற்கு [cath lab] மாற்றப்பட்டார். அங்கு அவருடைய மூளைக்காக ’இண்ட்ராவெனஸ் த்ரொம்பொலிசிஸ்’ [intravenous thrombolysis] மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. பின்னாளில் அவருடைய இதயத்திற்கு அஞ்சியோப்ளாஸ்டி மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. .

சென்னையில் பணி செய்து வரும் நரேன் என்ற 34 வயது இளைஞர் கடுமையான மேல் மற்றும் கீழ் மூட்டு வலியாலும் நெஞ்சு வலியாலும் அவதிப்பட்டார். அவர் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் கார்த்திகேயன் மற்றும் இ.டி. அருள் தலைமையிலான குழுவினர் ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை செய்து இதயத்தில் இருந்த தடைகளை அகற்றினர். அத்துடன் இன்ட்ராவினஸ் த்ரோம்பாலஜி [intravenous thrombolysis] மூலம் மூளையின் ரத்தநாளங்களில் இருந்த ரத்த உறைவும் நீக்கப்பட்டது.

இதேபோல் கண்னன் என்ற சென்னையைச் சேர்ந்த 32 இளைஞர், வலது மூட்டு பாதிப்பு மற்றும் பேச்சு இழப்பால் பாதிக்கப்பட்டு சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு பக்கவாதம் மற்றும் கரோனரி தமனி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவருக்கு அப்பல்லோ மருத்துவர்கள் குழு, த்ரோம்பக்டமி மற்றும் த்ரோம்போலிசிஸ் [Thrombectomy & Thrombolysis] சிகிச்சை முறைகளை மேற்கொண்டு மூளை ரத்த நாளங்களில் இருந்த அடைபப்புகளை அகற்றியதுடன் ஆன்ஜியோபிளாஸ்டி மூலம் இதயத்தில் இருந்த தடைகளையும் அகற்றினர்.

பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஒரு நபருக்கு கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் உரிய சிகிச்சைக்கான நேரமான முதல் மூன்று மணி நேரங்களுக்குள் உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் அவர் நோயிலிருந்து மீண்டு எழுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேல் குறிப்பிடப்பட்ட இரண்டு நோயாளிகளும் உரிய சிகிச்சைக்கான நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பில் இருந்து பெரிய அளவில் மீண்டுள்ளனர்.

இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ பல்நோக்கு மருத்துவமனையின் இடையீட்டு நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் [Dr. Karthikeyan, Consultant Interventional Neurologist, and Apollo Speciality Hospitals OMR] , “ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் சுமார் 20 ஆயிரம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே உரிய நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு நாங்iகள் சிகிச்சை அளித்துள்ளோம். அவர்களில் 50 சதவீதத்தினர் மட்டுமே கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் உரிய சிகிச்சைக்கான நேரத்திற்குள்ளாக சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனர். எனினும் அவர்களில் 90 சதவீதம் பேர் நோய் அறிகுறிகளில் இருந்து மீண்டுள்ளனர். எங்களது பக்கவாத சிகிச்சைப் பிரி்வு, 24 மணி நேரம் செயல்படும் அவசர சிகிச்சை மருத்துவர்கள், நரம்பியல் மருத்துவர்கள், இடையீட்டு நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள், இடையீட்டு கதிரியக்க சிகிச்சை நிபுணர்கள், அவசர கால பராமரிப்பு மருத்துவர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், பக்கவாதத்தைக் கையாளப் பயிற்சி பெற்ற செவிலியர் மற்றும் பிசியோதெரபி முறை மருத்துவ சிகிச்சை நிபுணர்களைக் [Emergency Physicians, Neurologists, Interventional neurologists, Intervention radiologists, Intensive care physician, Neurosurgeon, trained stroke nurse and physiotherapist] கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.” என்றார்.

பக்கவாத நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுகக்கு மாரடைப்பு தாக்கம் உள்ளதா என்பது குறித்தும் மதிப்பிட்டு சோதனைகள் செய்ய வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் இதய கோளாறுகள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்துகள் பக்கவாதம் உணர்த்துவதாக உள்ளது. இந்த இரு நோயாளிகள் பாதிக்கப்பட்டது அதையே மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.

V. #BALAMURUGAN #9381811222

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *