கற்று மாசு எங்கு இருந்தும் பயணித்து சென்னைக்கு வர வில்லை சமூக வலைத்தளங்களில் பரவும் பதிவுகளை நம்ப வேண்டாம்,
காற்று மாசு தடுக்க தமிழக அரசு சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் எந்தவித அச்சமும் பீதியும் அடையத் தேவையில்லை என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுபாட்டு மையத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,
புல் புல் புயலால் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் மேகங்கள் மிகவும் தாழ்வாக வந்துள்ளது. இதன் காரணமாக சூரிய ஒளி முழுமையாக நமக்கு கிடைப்பதில்லை அதன் காரணமாகவே மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாசு அளவு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதன் அடிப்படையில் மாசு அதிகமாக உள்ள இடங்களில் அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் மரம் பெயர் மற்றும் குப்பைகள் எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் கட்டட பணிகள், நடைபெறும் இடங்களில் தூசுகளை குறைக்க அதன் ஒப்பந்ததாரர்கள் மற்றும், கட்டட உரிமையாளர்களுக்கு போதுமான அளவு தண்ணீர் தெளிக்க அறிவுருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
வாகனத்திலிருந்து வெளியேறும் புகையிலிருந்து ஏற்படும் மாசுவை தடுக்கு போக்குவரத்துதுறை சார்பில் அறிவுருத்தப்பட்டிருகிறது
தமிழகத்தில் 28 இடங்களில் கற்று மாசு கருவிகள் உள்ளன இதில் சென்னையில் மட்டும் 8 இடத்தில் கற்று மாசு கருவிகள் உள்ளன
தமிழகத்தில் 28 இடங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே கற்றுரின் தரம் குறைவாக உள்ளது
காற்றின் மாசு தொடர்பாக யாருக்கும் இதுவரை சுவாச கோளாறு ஏற்பட்டதாக பதிவு இல்லை
கற்று மாசு தொடர்பாக மக்கள் பீதி அடையவேண்டும் கற்று மாசு தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்
கற்று மாசு எங்கு இருந்தும் பயணித்து சென்னைக்கு வர வில்லை சமூக வலைத்தளங்களில் பரவும் பதிவுகளை நம்ப வேண்டாம்