பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு பேரணி துவக்கவிழா

 

 

சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகிலுள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு பேரணி துவக்கவிழா மற்றும் மாண்டிசோரி கல்வி முறை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது…

நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொண்டு இந்நிகழ்வை கொடியசைத்து துவங்கி வைத்து மாணவ, மாணவியர்களுடன் பேரணியில் கலந்து கொண்டார்…

பேரணிக்கு முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் வேலுமணி…

மாணவ,மாணவியர்களிடம் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் சுத்தமான மற்றும் சுகாதாரமான சென்னை என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகையில் சுத்தமான வீடுகள். சுகாதாரமான வீதிகள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பள்ளி மாணவ. மாணவியர்களை சுகாதார தூதுவர்களாக நியமித்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு மாணவ , மாணவிaர்கள் மூலமாக பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது எனவும்,

ஒவ்வொரு பள்ளியிலும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்பட்டு சுமார் 20000 பள்ளி மாணவ சுகாதார தூதுவர்கள் மூலம் வீதிகள் வழியாக சென்று காய்ச்சல் தடுப்பு, தொற்றுநோய் ஒழிப்பு மற்றும் குடியிருப்புப் பகுதிகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பவுள்ளது..

சுகாதார தூதுவர்கள் என்னும் பொறுப்புகளை கொடுப்பதனால் மாணவர்களுக்கு நம் நாடு என்ற கடமையும் பொறுப்பும் ஒற்றுமை உணர்வும் ஓங்கி வளரச் செய்யும் என்பதற்காக இந்த திட்டத்தை அரசு துவங்கியுள்ளது என்றார்…

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள 200 தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மழலையர் பள்ளிகளில் மாண்டிசோரி கல்வி முறையை செயல்படுத்தும் வகையில் பயிற்சி முடித்த 38 பள்ளிகளை சார்ந்த 73 ஆசிரியர்களுக்கு எனது uபாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் பேசினார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *