ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள்

 

 

 

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் , ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி அவர்கள் 12.11.2019 அன்று ஆய்வு செய்தார்.

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் , ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் ஊரக வளர்ச்ச்சி துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்து ஆய்வுக்கூட்டம் இன்று 12. 11. 2019
சென்னை பனகல் கட்டட கூட்ட அரங்கில் ஆய்வு செய்தார் .

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019 – 20ம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளை எந்திரங்கள் மூலம் தூர்வாரவும் , கரைகளை பலப்படுத்தவும் மாநில அரசு நிதி ரூ .500 கோடியும் , அவற்றில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியாக ரூ. 750 கோடியும் ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டது . இப்பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்கும் வகையில் அலுவலர்கள் விரைவாக செயலாற்ற வேண்டும் என்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் , மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உன்னதத் திட்டமான தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் ( தாய் ) திட்டம் -II,
ஊரக குடியிருப்புத் திட்டங்களான முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் , பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் , மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் , தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுதல் , தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இதர ஊரக சாலைப் பணிகள் திட்டம் , சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் , குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல்,அம்மா பூங்கா , அம்மா உடற்பயிற்சி கூடம் போன்ற பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார் .
ஊரக வளர்ச்சித் துறையில் , பல்வேறு திட்டங்களின் கீழ் ஏற்கனவே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு தற்போது நிலுவையிலுள்ள அனைத்துப் பணிகளையும் , தரமானதாகவும் , திட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு , மக்கள் பயன்பெறத்தக்க வகையில் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் , நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் உரிய காலத்திற்குள் முடிக்கும் வகையில் அலுவலர்கள் விரைவாக செயலாற்ற வேண்டும் என்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார் .

மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தற்போது பயன்பாட்டில் உள்ள தெருவிளக்குகள் 100 சதவீதம் எரிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஊராட்சியில் உள்ள தெருக்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் . தெருவிளக்கு மற்றும் குடிநீர் தொடர்பாக வரும் புகார்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது .

மேலும், இந்த ஆண்டு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அதிக அளவில் நிலத்தடி நீரினை செறிவூட்டும் பணிகளை அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார் .

மேலும் , பொது மக்களிடமிருந்து அடிப்படை வசதிகள் கோரி வரப்பெறும் அனைத்து புகார்களின் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார் .

மேலும் , மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் விதி – 110ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் , மானியக் கோரிக்கை அறிவிப்புகள் உள்ளிட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார் . மேலும்ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்களது விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் விதமாக 12,524 கிராம ஊராட்சிகளில் அம்மா ஊரக இளைஞர் விளையாட்டு மையங்கள் அமைக்கும் பணிகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் திரு. ஹன்ஸ் ராஜ் வர்மா , இ. ஆ.ப., அவர்களும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி இ.ஆ.ப.,அவர்களும் மற்றும் கூடுதல் இயக்குநர்கள் , கண்காணிப்பு பொறியாளர்கள்( ஊரக வளர்ச்சி ) , அனைத்து மாவட்டங்களின் திட்ட இயக்குநர்கள் மற்றும் செயற் பொறியாளர்கள் ஊரக வளர்ச்சி ஆகியோர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *