சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் பேரணி
ஆவடி ராஜன் செய்தியாளர்
ஆவடி அருகே தனியார் பள்ளியின் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் பேரணி
ஆவடியை அடுத்த பட்டாபிராமில் சாலை விதிகளை பின்பற்றவும் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தியும் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.இந்த நிலையில் ஆவடி அடுத்த பட்டபிராம் பகுதியில் உள்ள இமானுவேல் பள்ளி மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.இதனை ஆவடி போக்குவரத்து உதவி ஆணையர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கோஷங்களை மாணவ மாணவிகள் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் எழுப்பினர்.பள்ளி வளாகம் துவங்கிய பேரணி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.சாலைபாதுகாப்பு பேரணியில் 500கும் அதிகமான மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இமானுவேல் பள்ளியின் தாளாளர் பீட்டர் லயன்ஸ் கிளப் கவர்னர் எஸ் வி மாணிக்கம் நந்தகோபால் மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்,
V. #BALAMURUGAN #9381811222