தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை கண்டித்து இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒன்பதாம் தேதி அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீப்பானது சட்டத்தை மறுத்து நம்பிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டது என கூறி சென்னை சேப்பாகத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த 2000 ற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடும்பங்கள், குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், உச்ச நீதி மன்றம் இஸ்லாமியர்களுக்கு அநீதியான தீர்ப்பு என தீர்ப்பினை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஎன்டிஜே அமைப்பின் பொதுச்செயலாளர் இ முகமது,
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ,நம்பிக்கை அடிப்படையிலானது, இஸ்லாமியர்களுக்கு எதிரான அநீதியான தீர்ப்பு.
உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கு வழங்க சொன்ன ஐந்து ஏக்கர் நிலத்தை நீதிமன்றத்திடமே இஸ்லாமியர்கள் திருப்பி வழங்குவோம். எங்களுக்கு பாபர் மசூதி இருந்த இடம் தான் வேண்டும்.
அடுத்த இலக்கு மதுர, காசி என சிலர் பேசி வருகின்றனர். அப்படியானால் இஸ்லாமியர்களின் இறை இல்லத்தை இஸ்லாமியர்களே பாதுகாத்து கொள்வோம்..
பேட்டி – இ முகமது, பொதுச்செயலர் டிஎன்டிஜே