தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ்

 

தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் முழுவதும் உள்ள நூற்றிற்கும் மேற்ப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சிறந்த மருத்துவமனைக்கான விருது வழங்கும் விழா சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டு மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார், இதில்
25 பிரபலமான தனியார் மருத்துவமனைகளுக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டத்தின் கீழ் 1027 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எட்டு சிறப்பு உயர் சிகிச்சைகளும், 38 முழுமையான பரிசோதனை முறைகளும் அடங்கும். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் திரு நாகராஜ், தேசியநல்வாழ்வு குழும இயக்குனர் திரு செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்,

தமிழகத்திலுள்ள மொத்தம் 743 தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 133 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன,

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே மற்ற மாநிலத்தில் இல்லாத அளவிற்கு சிறு சிகிச்சை முதல் உயர்ரக சிகிச்சை வரை இலவசமாக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இதுவரை 1002 மருத்துவமனைகள் அங்கீகிரிக்கப்பட்டுளன, ரூபாய் 6,451.9 கோடி மதிப்பீட்டில் 40.53 லட்சம் பயனாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டள்ளது.

அரசு மருத்துவமனையில் 18.53 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,400.20 கோடி மதிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

வருடத்திற்கு 1,361 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது, அதிகமாக நிதி தேவைப்படும் பட்சத்தில் அதனை ஒதுக்கவும் அரசு தயாராக இருக்கிறது.

வரலாற்று சாதனையாக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் 6 புதிய மருத்துவகல்லூரிகள் கட்ட மத்திய அரசு அனுமதியளித்து உள்ளார்கள், வளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவமனை வரைபடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது, விரைவில் பணி தொடங்கும்.

மேலும் மூன்று மாவட்டங்கள் கிருஷ்ணகிரி , நாகப்பட்டினம் , திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் புதிய மருத்துவகல்லூரிகள் கட்ட அனுமதி கோரியுள்ளோம் எனவும் தெரிவித்தார்

*பேட்டி :*

சி.விஜயபாஸ்கர்,
தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *