தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மேலவளவு முருகேசன் மற்றும் ஏழு பேரைவெட்டிக் கொன்ற குற்றவாளிகளை நன்னடத்தை விதிகள் மூலம் விடுதலை செய்தது

 

 

 

மேலூர் அருகே மேலவளவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மேலவளவு முருகேசன் மற்றும் ஏழு பேரைவெட்டிக் கொன்ற குற்றவாளிகளை நன்னடத்தை விதிகள் மூலம் விடுதலை செய்தது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது . ஆகவே இவர்களின் விடுதலையை கண்டித்து அம்பேத்கர் மக்கள் படை தலைவர் மதிபறையனார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பறையர் பேரவை தமிழக மக்கள் புரட்சி கழகம் அரங்க குணசேகரன், எஸ்டிபிஐ உமர் பாரூக், ஆதித்தமிழர் இயக்கம் வினோத் , தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் நிலவழகன் ,மக்கள் புரட்சி இயக்கம் ரமமூர்த்தி ,தமிழக ஒடுக்கப்பட்டோர் எஸ் கே சிவா, குடியரசுக் கட்சி இரா லிங்கேசன் ,குடிசைவாழ் மக்கள் முன்னேற்ற முன்னேற்ற சங்கம் குடிசை ராஜேந்திரன் ,ஏப்ரல் 14 இயக்கம் அம்பேத்கர் சசி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி , அம்பேத்கர் பேரவை சைதைஅன்புதாசன், அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி சாலமன், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி பழனி , மக்கள் கட்சி கழகம் மா.பா.வர்கீஸ், அண்ணல் அம்பேத்கார் விடுதலைக்கழகம் சக்தி வேல் , தமிழ்நாடு மக்கள் கட்சி இளையராஜா, ஜெய் அம்பேத்கர் மக்கள் சங்கம், கே.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டனத்தை தெரிவித்தனர் . அம்பேத்கர் மக்கள் படை கவிஞர் தென்னவன் நன்றி உரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *