இந்திய செலவு கணக்கில் துறையினரின் இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்று வருகிறது..
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் மூலதனம் திரட்டுவது அரசின் கொள்கை முடிவு இது தவறல்ல என காஸ்ட் ஆக்கவுண்டிங் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்..
தேசம் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் அதை எதிர்கொள்வது குறித்து இந்திய செலவு கணக்கில் துறையினரின் இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்று வருகிறது..
இந்த கருத்தரங்கில் தேசம் முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட கணக்கியல் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டனர்… இந்தியா முழுவதும் நூத்தி ஒரு மையங்களை கொண்டு செயல்படும் இந்த அமைப்பு ஆசியாவில் இரண்டாவது பெரும் அமைப்பாகும்.
நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்ப்பரேட் கமிட்டியின் தலைவர் முரளி… டிஜிட்டல் தொழில் நுட்பத்தினால் மென்பொருள் மற்றும் தொழில் துறைகளில் ஆட்குறைப்பு நடைபெறுவதாகவும்… அந்த சிக்கலை எதிர்கொண்டு கருத்தரங்கில் ஆய்வு செய்யப் பட்டதாகவும்..பொருளாதாரம் என்பது அனைத்து துறைகளையும் உள்ளடக்கியது.
எனவே ஒரு துறையில் ஏற்படும் சரிவு பொருளாதார தடுமாற்றத்தை ஏற்படுத்துவது இயல்பு இதிலிருந்து நாம் மீண்டும் வருவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து மூலதனத்தை திரட்டுவது அரசின் கொள்கை முடிவு அது தவறு அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்….
இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் கல்கத்தா சென்னை மும்பை மற்றும் டெல்லி ஆகிய நான்கு பிராந்தியத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்..