பாபர் மசூதி வழக்கில் மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டப்படி நியாயப்படி அல்லாமல் நம்பிக்கை சார்ந்து வழங்கியுள்ளது

 

 

 

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சந்திப்பு
பாபர் மசூதி வழக்கில் மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டப்படி நியாயப்படி அல்லாமல் நம்பிக்கை சார்ந்து வழங்கியுள்ளது சட்டப்படியான கேள்வி பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததா இல்லையா இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவிலும் இல்லை வேறு இந்துக் கோவிலும் இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது மேலும் 1949இல் ராமர் குழந்தை சிலை பாபர் மசூதிக்குள் வைத்தது சட்டவிரோதம் 1992 பாபர் மசூதியை இடித்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பில் குறிப்பிட்டு விட்டு சாஸ்திரங்கள் நம்பிக்கை சார்ந்து பாபர் மஸ்ஜித் இடத்தை ராமர் கோவில் கட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது மாண்புமிகு உச்சநீதிமன்றம் மறுஆய்வு செய்யவேண்டும் சட்டப்படி தீர்ப்பளிக்க வேண்டும் என்று ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்பு கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது இதை பதிவு செய்யும் முகமாக ஜனநாயக அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்த தூத்துக்குடி காவல்துறையிடம் 19/ 11/ 2019 மனு அளிக்கப்பட்டது 25/ 11 /2019 அன்று இனவாத மதவாத சமூக விரோத செயல்கள் நடைபெறும் அரசு சொத்துக்கள் சூறையாடப்படும் அடித்து நொறுக்கப்படும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று உண்மைக்கு மாறாக கூறி அனுமதி மறுத்துள்ளது ஜனநாயகப் போராட்டத்தை மறுப்பதில் நியாயம் இல்லை அது ஜனநாயக படுகொலை என்று ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்பு கூட்டமைப்பு கருதுகிறது தனது கண்டனத்தை பதிவு செய்கிறது தற்காலிகமாக ஆர்ப்பாட்டம் நிறுத்தி வைத்து மறு தேதி அறிவிக்கப்படும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *