7 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்

 

 

 

கன்னியாகுமரி ,காஞ்சிபுரம், நாகப்பட்டினம் , தர்மபுரி, திருநெல்வேலி, திருவள்ளூர், சென்னை ஏறத்தாழ 7 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்*

வருவாய்ழ் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் சேப்பாக்கம், எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாடு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் :-

நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் ஜம்முவில் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியாளர்கள் , பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுவரை தமிழக அரசங்கம் மேற்கொண்ட நிலத்தடி நீர் உயர்த்த திட்டம் , குடி மராமத்து பணிகள், விவசாயம் மற்றும் குடிநீர் மேம்பட்டு, கஜா,ஓக்கி புயல் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டோம்.

16.10.19 முதல் வடக்கிழக்கு பருவ மழை தொடர்ந்தது.

தற்போது கிடைத்திருக்குற மழை அளவு 8 மாவட்டங்களுக்கு மேல் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது.

நீர் தேங்குகிற இடத்தில் உடனடியாக நீரை அகற்றவும், தாழ் வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண முகாம்களில் தங்க ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.

கன்னியாகுமரி காஞ்சிபுரம், நாகப்பட்டினர் , தர்மபுரி, திருநெல்வேலி, திருவள்ளூர், சென்னை ஏறத்தாழ 7 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழு அனுப்பப்பட்டுள்ளது.

4399 பாதிக்க பட கூடிய இடங்கள் . இதற்கு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

27587 நீச்சல் மற்றும் மரம் ஏற தெரிந்தவர்கள் ,
பேரிடர் மேலண்மை துறை மூலம் பயிற்சி பெற்றவர்கள் மாவட்ட கண்காணிப்பாளர்கள் மூலம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க பட உள்ளது.

பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்லிட்ட அணைகளில் மகிழ்ச்சி தரும் அளவில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளனர். அழைப்பு கொடுத்ததும் அவர்கள் பணி வழங்கப்படும்.

அதிக தண்ணீர் தேங்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, தண்ணீர் உறிஞ்சும் லாரி மூலம் நீரை அகற்ற வழி செய்யப்படும்..

ஏரி, குளங்களில் அருகே நின்று மக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கனமழை பெய்யும் இடங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர் .மக்கள் அய்யம் கொள்ள வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *