மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இப்படையில் உள்ள அனைவரும் மீட்புப்பணிகள் மேற்கொள்வது குறித்து சிறப்பு பயிற்சி
தூத்துக்குடி மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி பேரிடர் கால மீட்புப்பணிகள் காவல்துறை சார்பாக துரிதமாக நடைபெற்று வருகிறது. திங்கள், 2
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி அந்தந்த, காவல் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்து சிறப்பு பயிற்சி பெற்ற 8 காவல்துறை வீரர்கள் அடங்கிய குழுவினர் நேற்று(01.12.2019) மற்றும் இன்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையின் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (State Disaster rescue Force) தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் முகாமிட்டு ஆங்காங்கே மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இப்படையில் உள்ள அனைவரும் மீட்புப்பணிகள் மேற்கொள்வது குறித்து சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களிடம் மீட்புப்பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக மடிக்கக்கூடிய படுக்கை(Foldable Stretcher), மண்வெட்டி, மரம் அறுக்கும் இயந்திரம், கோடாரி, முதலுதவி மருத்துவ உபகரணங்கள், நைலான் கயிறு, நீண்ட கத்தி, கடப்பாறை போன்ற அனைத்து விதமான உபகரணங்களும் வைத்துள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் ஒரு சார்பு ஆய்வாளர் தலைமையில் 10 வீரர்கள் உள்ளனர்.மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த சாலைகளை சீரமைத்தல், மழை வெள்ளம் பாதிக்காமல் இருப்பதற்கு மணல் முட்டைகள் அடுக்குதல், சாலையில் மழையால் சரிந்த பெரிய மரங்களை வெட்டி அகற்றுதல், பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுதல், ஆற்றில் குளிக்க கூடாது என மழை வெள்ளம் குறித்த எச்சரிக்கைகளை ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட மறவன்மடம், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திமரப்பட்டி, வீர நாயக்கன் தட்டு, ஆத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முக்காணி, ஆத்தூர், ஏரல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிவராமமங்கலம் உட்பட 36 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என அடையாளம் காணப்பட்டு அந்த பகுதிகளுக்கு காவல்துறை அதிகாரிகள் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் தங்குவதற்கு அந்தந்த பகுதிகளில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு பள்ளிக்கூடம் மற்றும் திருமண மண்டபம் போன்ற இடங்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர் மேலும் அனைத்து பகுதிகளுக்கும் அதிகப்படியான காவலர்கள் ரோந்து அனுப்பப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அல்லது அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ காவல்துறையின் அலைபேசி எண் 9514144100 அல்லது அவசர தொலைபேசி எண் 100ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.