தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் 22ஆவது பொது பேரவை கூட்டம் தலைவர்
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் 22ஆவது பொது பேரவை கூட்டம் தலைவர் ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது..
கடந்த இரண்டு வருடங்களுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் தணிக்கைச் சான்றிதழ் அங்கீகரித்தல்… தலைவர் பயன்பாட்டிற்காக புதிய கார் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட து…
இணையத்தின் வணிக வளர்ச்சிக்கு.முன்னணி நிறுவனம் நுகர் பொருட்களை கூட்டுறவு பண்டகசாலை களுக்கு வழங்க உரிய கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்முதல் செய்தல் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான அனைத்து வகை எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை கொள்முதல் செய்தல் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு முகவர்களாக செயல்படுதல் இணைய கணக்குகளை கணினி மயமாக்கி வியாபாரத்தை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனையும் கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு பணிக்கொடை தொகை ரூபாய் 10 லட்சத்திலிருந்து நிதி சட்டத்தின்படி 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது இணைய பணியாளர்களுக்கும் வழங்க உரிய துணைவிதி திருத்தம் செய்துகொள்ள நிர்வாகக்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.. இணையத்தின் காலி மனையில் புதிய அலுவலகம் கட்டுவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகத்தின் திட்டத்தின் அனுமதியுடன் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுமதியுடன் இணையத்தின் சொந்த நிதியிலிருந்து ரூபாய் 2 கோடியே 19 லட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் களை ஒதுக்கீடு செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது..
இக்கூட்டத்தில் துணைத்தலைவர் ராஜா… இணையத்தின் மேலாண் இயக்குனர் டி அமலதாஸ் மற்றும் கூட்டுறவு இணையத்தின் இயக்குனர்கள் மொத்த பண்டகசாலையின் பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.