இதய நோய்க்கும், சர்க்கரை நோய்க்கும் எகிப்து வெங்காயம் சாப்பிடுவது நல்லது

 

 

சென்னை – அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு*

இதய நோய்க்கும், சர்க்கரை நோய்க்கும் எகிப்து வெங்காயம் சாப்பிடுவது நல்லது எனவும் எகிப்து வெங்காயத்தைக் குறித்து தவறான செய்திகளை பரப்பி மக்களை பீதியடையச் செய்ய வேண்டாம் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் வெங்காய விலையேற்றம் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், கடந்த அக். 30 ஆம் தேதி வெங்காய விலையேற்றம் தொடர்பாக முதல்வருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவரது அறிவுறுத்தலின்படி முதற்கட்டமாக பண்ணை அசுமை நுகர்வோர் அங்காடிகள் மற்றும் ரேஷன் அங்காடிகள் மூலம் வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்க முடிவெடுத்ததாக தெரிவித்தார்.

அதனடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் 34 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போதே வெங்காய விலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மேலும் மத்திய தொகுப்பிலிருந்து முதற்கட்டமாக எகிப்து வெங்காயம் 500 டன் இறக்குமதியாகவுள்ளது எனவும் அது வந்தவுடன் விலை மேலும் சரிவடையும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்த எகிப்து வெங்காயத்தை குறித்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவித்த அமைச்சர், எகிப்து வெங்காயத்தில் சர்பர் இருப்பதால் காரத்தன்மை மிக்கதாக இருக்கும் எனவும் இது இதய நோய் மற்றும் சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் எகிப்து வெங்காயம் குறித்து தவறான செய்தி பரவுவதைக் கேட்டு நேற்று எகிப்து வெங்காயத்தை முதல்வர் சாப்பிட்டு பார்த்து பரிசோதித்துள்ளார் என தெரிவித்த அவர், நேற்றைய தினம் 296 ரேஷன் அங்காடிகள் மற்றும் 179 பண்ணை பசுமைக் கடைகளிலும் அந்த வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 25 ஆயிரம் கிலோ வெங்காய விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு ஈரோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் சொட்டு நீர் பாசன முறையில் 60 ஆயிரம் ஏக்கரில் உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் வெங்காய விலை கட்டுக்குள் கொண்டுவரப்படுக் எனவும் அவர் கூறினார்.

மேலும், திமுக ஆட்சி காலத்தில் வெங்காய விலையைக் கேட்டாலே கண்ணீர் வந்த நிலையில் இன்று அதிமுக அரசை அவர் விமர்சித்து வருவதாக கூறிய அவர், வெங்காய விலையை குறைக்க திமுக ஆட்சி காலத்தில் என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பினார்.

மேலும், பண்ணை பசுமை அங்காடிகளில் வெங்காயம் பதுக்கப்படுவதாக வரும் வதந்திகள் தவறு என சுட்டிக்காட்டிய அப்படி தவறு செய்யும் நபர்கள் மீது புகார் வந்தார் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், நகரும் பண்ணை பசுமை கடைகள் மூலம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக கூறுவது தவறு என தெரிவித்த அவர், விலை தொடர்ந்து அதிகரித்தால் நகரும் பண்ணை பசுமை கடைகளை அதிகரித்து பொதுமக்களுக்கும் வினியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *