காவல் ஆயுதப்படைப்பிரிவை மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் திரு. கே.பி சண்முகராஜேஸ்வரன் இ.கா.ப அவர்கள் இன்று ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல் ஆயுதப்படைப்பிரிவை மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் திரு. கே.பி சண்முகராஜேஸ்வரன் இ.கா.ப அவர்கள் இன்று ஆய்வு

 

செய்தார் அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை காவல்துறை தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு காவல்துறை தலைவர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவை இன்று(17.12.2019) மதுரை தென்மண்டல ஐ.ஜி திரு. கே.பி சண்முகராஜேஸ்வரன், இ.கா.ப. அவர்கள் 2019ம் ஆண்டுக்கான ஆய்வை மேற்கொண்டார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் உடனிருந்தார்.அப்போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. மகேஷ் பத்மநாபன் தலைமையில் காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை தலைவர் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.பின் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து(Parade), ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் உடமைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை பார்வையிட்டு, அவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். பின் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாரியப்பன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. மகேஷ் பத்மநாபன், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் திரு. மயிலேறும் பெருமாள், திரு. ஈஸ்வரமூர்த்தி, திரு. சொர்ணமணி, திரு. நாகராஜன், திரு. நடராஜன், திரு. மணிகண்டன், திரு. வேல்முருகன் உட்பட காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *