பொன்காளியம்மன் கோவிலில் மார்கழி உற்சவ திருவிழாபல்லடம். டிச.23
பல்லடம் அருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவிலில் மார்கழி உற்சவம் விழாவை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி யினரின் பஜனை நடைபெற்றது. அதன் பிறகு பணிக்கம்பட்டி சுப்பிரமணியர் குழுவினரின் வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது .பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கிய தமிழ் சங்கத் தலைவர் கண்ணையன், நம்மாழ்வார் செக்காலை உரிமையாளர் ராஜேந்திரனுக்கு விழாக் குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.