தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 18 ஆயிரத்து 245 வாக்காளர்கள் உள்ளதாக
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக
கூட்டரங்கில் வரைவு வாக்காளர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட
ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, அனைத்து கட்சி
பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர்
மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி
பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும். இன்று
வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6,95,726 ஆண்கள், 7,22,407 பெண்கள்,
இதர 112 நபர்கள் என மொத்தம் 14,18,245 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்
பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் – 2020 பணியானது 23.12.2019 அன்று
ம�¯