உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் அறிவுரைகள் வழங்கினார். வருகிற முதற்க்கட்ட உள்ளாட்சி தேர்தல் 27.12.2019 அன்று தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி மற்றும் சாத்தான்குளம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்குப்பதிவு 516 வாக்குச்சாவடி மையங்களில் (Polling Station Location) 824 வாக்குச் சாவடிகளில் (Polling Stations) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இந்த முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த இரண்டு கம்பெனி காவல்துறை வீரர்கள் வந்துள்ளனர். மேலும் திருநெல்வேலி மாநகரம், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுமார் இரண்டாயிரம் (2,000) போலீசார் இந்த முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர்.ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு காவல் ஆய்வாளர் வீதம் 7 ஊராட்சி ஒன்றியத்திற்கு 7 காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மேற்பார்வையில் ஒரு உதவி ஆய்வாளர் அல்லது ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அடங்கிய மொபைல் வாகன ரோந்து படையினர் வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு மற்றும் அதன் உபகரணங்களை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்வது முதல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அவற்றை வாக்கு எண்ணும் மையங்களில் ஒப்படைப்பது வரை தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு அவர்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து இன்று (25.12.2019) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் அறிவுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *