என்.ஆர்.சி திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கம் நடத்த முடிவு !

 

 

 

என்.ஆர்.சி திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கம் நடத்த முடிவு !

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
தலைவர் பி.ஜெயினுலாப்தீன் பேட்டி !

NTF (National Thowheed Federation) என்னும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் P.ஜைனுல் ஆபிதீன்
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையைத் தகர்க்கும் விதமாக,

ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக

மதத்தின் பெயரால் மக்களை கூறுபோடுவதற்காக

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள CAA என்னும் புதிய குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

மேலும்
அஸ்ஸாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட NRC என்னும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை

இந்தியா முழுவதும் நடத்த இருப்பதாக

மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா தெரிவித்துள்ளார்.

இத்தகைய பாசிச சிந்தனை கொண்ட பா.ஜ.க. வின் அறிவிப்புக்கு
எதிராக
முஸ்லிம்களும்,

முஸ்லிமல்லாத நடுநிலை சிந்தனை கொண்ட பெரும்பான்மை மக்களும்
நாடு முழுவதும் கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டாங்களில் மாணவர்கள், இளைஞர்கள், முதியோர்கள் என மக்கள் எழுச்சியுடன் கலந்துக் கொண்டு வருகின்றனர்.

போராட்டத்தின் வீரியத்தைக் குறைப்பதற்காக மத்திய அமைச்சர்களும், பாஜகவினரும் பல்வேறு பொய்யான தகவல்களையும், முரண்பாடான கருத்துக்களையும்
தெரிவித்து வருகிறார்கள்.!

நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, மத்திய அரசு

NRC திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் பிடிவாதம் காட்டினால் , அதனை
முஸ்லிம்களைப் பொறுத்தவரை

வாழ்வா சாவா என்று தீர்மானிக்கும் பிரச்சனையாகவே கருதும் நிவையிலேயே உள்ளோம்.

,அதற்கு எதிராக அடுத்தக் கட்ட நகர்வை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

“ஒத்துழையாமை இயக்கம்” என்ற ஆயுதத்தை இந்திய முஸ்லிம் சமூகம் முன்னெடுப்பதற்கான ஆயத்தப் பணிகளை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ளது.

25 கோடி இந்திய முஸ்லிம்களில் ஒரே ஒருவர் கூட NRC. தொடர்பான எந்த ஆவணங்களையும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மாட்டோம்

முஸ்லிம்களாகிய நாங்கள் இந்திய குடிமக்கள்தான் என்பதற்கான பல ஆவணங்களை வைத்திருந்த போதிலும் அதனை அரசாங்க கணக்கெடுப்பின் போது எந்த ஒரு அதிகாரிகளிடம் காட்ட மாட்டோம்

அரசாங்கத்தின் என்.ஆர்.சி. திட்டத்துக்கு எந்த வகையிலும் ஒத்துழைக்க மாட்டோம் என ஒவ்வொரு முஸ்லிமும் உறுதிமொழி ஏற்க உள்ளோம் .

மத்திய அரசுக்கு எங்கள் குடியுரிமையை பறிக்க திராணி இருந்தால் ,

*நாட்டின் 25 கோடி முஸ்லிம்களின் குடியுரிமையையும் பறித்துப் பார்க்கட்டும்

முடியுமானால் இந்தியாவின் 25 கோடி முஸ்லிம்களையும் நாடற்றவர்களாக அறிவிக்கட்டும்

எங்கள் குடியுரிமையை பறித்து எத்தனை கோடி பேரை எத்தனை தடுப்பு முகாம்களில் அடைக்க முடியும் ?என்பதை நாங்கள் பார்க்கிறோம்

அதன் விளைவு என்னவாகும்? இந்த பிரச்சனையில் உலக நாடுகளும், ஐ.நா.சபையும்,மனித உரிமை அமைப்புகளும் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்பதை மத்திய அரசு சிந்திக்கட்டும்

என்பதை மத்திய பா.ஜ.க. அரசுக்கு உணர்த்தும் வகையில்

நாடு முழுவதும் உள்ள ஜமாஅத்துகள் உறுதிமொழி ஏற்று “ஒத்துழையாமை ” தீர்மானங்கள் நிறைவேற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், மாநில முதல்வருக்கும் அனுப்ப இருக்கிறோம்.

மேலும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளான இந்து மற்றும் கிறித்தவ சமூகங்களைச் சேர்ந்த மக்களும் எங்களின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாக

எங்களோடு கரம் கோர்க்க வேண்டும் என்று அன்பான அழைப்பை விடுக்கிறோம்.

இவ்வாறு பி.ஜெயினுலாபுதீன் தெரிவித்தார்.

பேட்டியின்போது மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன், மாநிலப் பொருளாளர் ஜாஹிர் ஹுசைன், மாநில துணைத் தலைவர் சேப்பாக்கம் அன்சாரி மற்றும் மாநிலச் செயலாளர்கள் கமருதீன், பூவை அப்துல்காதர் மற்றும் வசீம் உட்பட சென்னை மண்டல நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *