சென்னை புத்தகக் காட்சியை ஜனவரி 9,மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 43-வது
சென்னை புத்தகக் காட்சியை ஜனவரி 9, 2020 அன்று துவக்கி வைக்கிறார்

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்

புத்தகக் காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார் !

• 750க்கும் அதிகமான அரங்குகள், கோடிக்கணக்கான புத்தகங்கள்,

லட்சகணக்கான வாசகர்கள்
* “கீழடி – ஈரடி” கண்காட்சி, எழுத்தாளர் முற்றம், மணல் சிற்பம், சென்னை

வாசிக்கிறது போன்ற புதுமையான நிகழ்வுகள்
சென்னை : தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி)
நடத்தும் 43-வது சென்னை புத்தகக் காட்சியை, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஎ (MCA)
மைதானத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனவரி 9.
2020 அன்று துவக்கி வைக்கிறார். இப்புத்தகக் காட்சியின் நிறைவு விழாவில் மாண்புமிகு தமிழக
துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பங்கேற்கிறார்.

ஆசியாவின் மிகப்பெரிய புத்தகக்காட்சிகளுள் ஒன்றான சென்னை புத்தக காட்சி ஜனவரி 9 முதல்
21 வரை 13 நாட்கள் நடைபெறுகிறது. 750க்கும் அதிகமான அரங்குகளில், கோடிக்கணக்கான
புத்தகங்கள் இடம்பெறும் இப்புத்தகக் காட்சிக்கு தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் நாட்டின் பிற
மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான வாசகர்கள் வருடம்தோறும் வருகை
தருகின்றனர்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ (YMCA) மைதானத்தில் ஜனவரி 9, 2020 அன்று மாலை 6.
மணிக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 43-வது சென்னை
புத்தகக் காட்சியை துவக்கி வைத்து, சிறந்த பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு விருதுகள்
வழங்கி கவுரவிக்கிறார். மேலும் இந்நிகழ்வில் தமிழக அமைச்சர் பெருமக்களும் கலந்து
கொள்கின்றனர். மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு. ஓ.பன்னிர்செல்வம் அவர்கள் ஜனவரி
21, 2020 அன்று மாலை 6 மணிக்கு புத்தகக் காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்று,
பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறார்.

மேலும் வாசகர்களின் அறிவை விரிவு செய்யும் நோக்கில், திறந்தவெளி அரங்கில் புத்தகக் காட்சி
நடைபெறும் 13 நாட்களும் புத்தக வெளியீடுகள் மற்றும் தலைசிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள்,
விஞ்ஞானிகள், கலை உலகினர் பங்கு பெற்று சிறப்பிக்கும் அரங்க நிகழ்வுகளும்
நடைபெறுகின்றன.
43-வது சென்னை புத்தகக் காட்சி தொடர்பாக இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்
திரு. ஆர்.எஸ்.சண்முகம், தலைவர் – பபாசி, திரு. எஸ். கே. முருகன், செயலாளர் – பபாசி, திரு. ஆ.
கோமதிநாயகம், பொருளாளர் – பபாசி மற்றும் பல பபாசி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.!
சென்னை புத்தகக் காட்சி நடைபெறும் ஒய்எம்சிஏ (YMCA) மைதானத்தில், ஒரிசாவைச் சேர்ந்த
பிரபல சிற்பக்கலைஞர் திரு. சுதர்சன் பட்நாயக் அவர்கள் திருவள்ளுவரின் உருவத்தை ஜனவரி 8,
2020 அன்று மணல் சிற்பமாக வடிவமைக்கிறார்.

உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியின் சிறப்பையும்,
பாரம்பரியத்தையும் மற்றும் திருக்குறளின் பெருமையையும் புத்தகக் காட்சிக்கு வரும் அனைவரும்
அறிந்து கொள்ளும் வகையில் “கீழடி – ஈரடி’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று
தமிழக தொல்லியல் துறையின் ஒத்துழைப்போடு அமைய உள்ளது.

எழுத்தாளர்கள் – வாசகர்கள் – பதிப்பாளர்களை இணைக்கும் “எழுத்தாளர் முற்றம்” என்ற நிகழ்வு
இந்த ஆண்டு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற சுமார் 25 எழுத்தாளர்கள்
தங்களது படைப்புகளை சென்னை புத்தகக் காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளனர். !

உலகப்புகழ் பெற்ற பல்வேறு பதிப்பாளர்கள் பங்குபெறும் இந்த 43-வது சென்னை புத்தகக்
காட்சியில் பொதுமக்கள் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி
வழங்கப்படும். சென்னையைச் சுற்றியுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்
நுழைவுக்கட்டணம் இன்றி இப்புத்தகக் காட்சிக்கு வரும் வகையில் அந்தந்த கல்வி
நிறுவனங்களுக்கு பபாசியின் சார்பில் இலவச அனுமதிச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இப்புத்தகக் காட்சியின் நுழைவுக்கட்டணம் ரூ.10 ஆகும்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வகையில்
பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி-வினா போன்றவை பல்வேறு பிரிவுகளில்
நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும், புத்தகங்களும் வழங்கப்படும்.
இளம் இயக்குனர்களை ஊக்குவிக்கும் வகையில் குறும்படம், சமுக நலன் மற்றும் புத்தகம்
தொடர்பான ஆவணப்படங்களை திரையிட தனி அரங்கு, ஆன்லைன் மூலம் நுழைவுச்சீட்டு
பெறும் வசதி, மாற்றுத்திறனாளிகள் எளிதில் பார்வையிட சக்கர நாற்காலிகள், இப்புத்தகக் காட்சி
வளாகத்தில் ATM, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மூலம் புத்தகம் வாங்கும் வசதி போன்ற
ஏற்பாடுகள் வாசர்களுக்காக செய்யப்பட்டுள்ளன.

வேலை நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை
11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும் இப்புத்தகக்காட்சிக்கு பபாசி
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *