எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண்டு களிக்கும் நோக்கில் சிறுவர் _ சிறுமியர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி

ஜெ.ஓ.டி தனியார் அமைப்பின் சார்பில்
எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண்டு களிக்கும் நோக்கில் சிறுவர் _ சிறுமியர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி

கோட்டூர்புரம் :
ஜே. ஓ.டி.என்கிற தனியார் அமைப்பின் மூலம் சிறுவர்-சிறுமியர்களின் நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலை கழக மைதானத்தில் நடந்தது.

இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களுடைய திறமையை நடனமாடியும், பாட்டு பாடியும் வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் பார்வையாளராக 200 பேர் கலந்துக் கொண்டனர்.சிறப்பான முறையில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

ஜெ.ஓ.டி என்கிற அமைப்பு தனியார் நிகழ்வுகள் தாண்டி சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டு திறமை கொண்ட நபர்கள் அவர்களது திறமையை வெளிப்படுத்த அதற்கான மேடை அமைத்துத் தருகிறார்கள். இந்த நிகழ்வு நடத்துவதற்கு முதற்காரணம் எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இந்த நிகழ்வினை கண்டு ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

அடித்தட்டு மக்களின் இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்தக் கூடியது ஜெ.ஓ.டி அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

திறமையுள்ள ஏழை, எளிய குழந்தைகளின் திறமையை வளர்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கில் கூடிய விரைவில் ஜெ.ஓ.டி நிறுவனம் அந்த நிகழ்ச்சியை அறிவிக்கும்.

பாடல் பாடும், நடனமாடும் திறமையுள்ள ஏழை எளிய குழந்தைகள் ஜெ.ஓ.டி, கே.கே.நகர் அலுவலகத்தை அணுகலாம் என நிகழ்ச்சி செயற்பாட்டாளர் சிவராமகிருஷ்ணன் சிவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *