தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில நிருவாகிகளின் அவசரக் கூட்டம்

 

 

 

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில நிருவாகிகளின் அவசரக் கூட்டம்

பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கிட மாநிலத் திட்ட இயக்குநர் (ss) , தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை,

1. பள்ளிக்கல்வித் துறையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணக்கு மேலாளர் . கணக்காளர்கள் மற்றும் கணினி விவரப் பதிவாளர் ஆகியோர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற மிக குறைந்த மாத ஊதியத்தை மாற்றி மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை நிர்ணயம் செய்யும் ஊதியத்தை புதுப்பித்து அவ்வூதியத்தை வழங்கிட வேண்டும்.

.2 . மாநிலம் , மாவட்டம் மற்றும் வட்டார வள மைய அளவில் பணிபுரிந்து வரும் கணக்காளர்கள் மற்றும் கணினி விவரப் பதிவாளர் ஆகியோர்களுக்கு கடந்த 2016 முதல் 2019 வரை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் திட்ட ஒப்புதல் வாரியம் நிர்ணயம் செய்யப்பட்ட மாத ஊதியத்தினை கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை . எனவே நிலுவையிலுள்ள ஊதிய உயர்வுத் தொகையை உடனே வழங்கிட வேண்டும் .

3 . 2020 – 21ம் ஆண்டுத் திட்ட பட்ஜெட்டில் கணக்கு மேலாளர் , கணக்காளர்கள் மற்றும் கணினி விவரப் பதிவாளர் ஆகியோர்களுக்கு மாத ஊதியத்திற்கான நிதியை கல்வித் தகுதி , பணி நிலை மற்றும் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா , கர்நாடகா , கேரளா மற்றும் பிற மாநிலங்களில் ஊதியம் வழங்குவதைப் போல தமிழ்நாடு ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் உயர்த்தி வழங்கிட வேண்டும்

4 . இத்திட்டத்தில் 2015ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட கணினி விவரப் பதிவாளர்கள் மற்றும் கணக்காளர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் இதுநாள் வரை எந்தவித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை . எனவே , இவர்களின் நிலையைக் கருத்தில்கொண்டு ஊதிய உயர்வு உடனடியாக கிடைத்திட வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

5 . பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் தொகுப்பூதிய அடிப்படையில் பணி செய்துவரும் கணக்கு மேலாளர் , கணக்காளர்கள் , கணினி விவரப் பதிவாளர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் உட்பட ஏறக்குறைய 1517 பணியாளர்களுக்கு இவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு நிரந்தர பணியாளர்களின் ஊதியத்திற்கு இணையான காலமுறை ஊதியம் வரன்முறை செய்து , பணிநிரந்தரம் செய்ய ஆவண செய்யுமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்

பி.கே. இளமாறன்
மாநிலத் தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *