பூச்சிஅத்திப்பேடு அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் 6 ஆம் ஆண்டு தீமிதிதிருவிழா
பூச்சிஅத்திப்பேடு அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் 6 ஆம் ஆண்டு தீமிதிதிருவிழா நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த
பூச்சிஅத்திப்பேடு மஹாலக்ஷ்மி நகர் கரையோரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் 6-வது வருடம்தீமிதி திருவிழா மற்றும் மாசி மாதத் திருவிழா ஆலய நிர்வாகி வெங்கட்ராமன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியையொட்டி கடந்த 14-2-2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 7 மணிக்கு கிராம தேவதை செல்லியம்மன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்தனர் இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது மதியம் 12 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது மாலை 6 மணிக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றும் உற்சவம் நடைபெற்றது இரவு 8 மணிக்கு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது 15/2/2020 சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் அக்னி கப்பறை கரத்தில் ஏந்திய வண்ணம் அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியையொட்டி 16/2/2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடைபெற்றதுஇதனையடுத்து மாலை 6 மணி தீமிதி திருவிழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் காப்பு கட்டி கடும் விரதம் இருந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர் இதில் சுற்று வட்டாரத்திலுள்ள திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதி திருவிழாவை கண்டுகளித்தனர் முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது