ஜெயின் மகளிர் கல்லூரியில் விஸ்காம் துறையினரால் மீடியா ஃ பெஸ்ட் எனும் கல்லூரிகளுக்கான போட்டி நிகழ்ச்சி
சென்னைத் தியாகராயநகரிலுள்ள ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் விஸ்காம் துறையினரால் மீடியா ஃ பெஸ்ட் எனும் கல்லூரிகளுக்கான போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை நடிகரும் இயக்குநருமாகிய திரு.போஸ் வெங்கட் அவர்கள் தொடங்கி வைத்தார்.கல்லூரிகளுக்கிடையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 75 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். சென்னைப் பல்கலைக் கழகம் ,எம்.ஓ.பி, விவேகானந்தா கல்லூரி,நியூ கல்லூரி ,மற்றும் கோயமுத்தூர் பி.எஸ்.டி.கல்லூரி போன்ற கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.பரிசு வென்ற மாணர்களுக்கு திரைப்பட சண்டைப் பயிற்றுநர் மற்றும் இயக்குநருமாகிய திரு.ஜாக்குவார் அவர்கள் ரொக்கப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் பேசிய ஜாக்குவார் தங்கம் மாணவ மாணவியர் உடல்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்