இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழா
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் மொரீசியஸ் நாட்டின் துணை பிரதமர் லீலா தேவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் இலவச இஸ்திரி பெட்டி, உடல் ஊனமுற்றவர்களுக்கான செயற்கை கால்கள் மற்றும் மூன்று சக்கர சைக்கிள்கள் ஆகிய உபகரண பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
விழாவினை அடுத்து செஞ்சிலுவை சங்கத்தில் இலவச ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.