சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி தமிழக பாஜக ஆயிரம் விளக்கு பகுதி சார்பில் ஏராளமான பெண்களுக்கு இலவச சேலை வழங்கும் விழா,

சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி தமிழக பாஜக ஆயிரம் விளக்கு பகுதி சார்பில் ஏராளமான பெண்களுக்கு இலவச சேலை வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது,

இதில் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான திரு பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இப்பகுதி மக்களுக்கு சேலைகளை கொடுத்து மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர்,நமது நாட்டின் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததாகவும் அவரது தாய் பட்ட கஷ்டத்தை வேறு எந்த தாயும் இந்நாட்டில் படக் கூடாது என்பதற்காகவும் இந்நாட்டிலுள்ள பெண்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் இலவச எரிவாயு போன்ற
சிறந்த சலுகைகளை அறிவித்து வழங்கியுள்ளார் என்றும் இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பெண்களை சந்திரனுக்கு நிகராக ஒப்பிட்டு பேசிய அவர் பாரத நாட்டில் மட்டுமே பெண்களை தெய்வங்களாக மதிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில்,
செய்தியாளர்களை சந்தித்த அவர்
மத்திய அரசு பெண்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் திரு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெண்களுக்கு தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்த அவர் வங்கிகளிலும் பெண்கள் தொழில் தொடங்க இன்று ஏராளமானோர் வங்கிகளில் கடன் பெற்று தொழில் முனைவோராக நாட்டில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்,

மேலும் செய்தியாளர்கள் சிஏஏ குறித்து கேட்டபோது,

இந்நன்னாளில் இஸ்லாமிய தாய்மார்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் தவறான திசைதிருப்பல் களுக்கு ஆளாக வேண்டாம் என்றும் இச்சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த மதத்தினருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறினார்,

திமுக,
காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் இந்திய குடியுரிமை சட்டத்தை வேண்டுமென்றே முஸ்லிம் சமுதாயத்தினரை தவறான வழியில் திசை திருப்புவதாகவும் குற்றம்சாட்டினார்,

-மேலும் இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடன இயக்குனர் திருமதி காயத்ரி ரகுராம் மற்றும் சென்னை பாஜக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *