ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்

 

 

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்

முதல் முறையாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள எஞ்ஜிய அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு செல்லூர் ராஜூ அமைச்சர் தெரிவித்தார்,

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறை சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு சிறு வணிக கடன் , சுய உதவி குழு கடன், பணிபுரியும் மகளிர் கடன், மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதிய கடன், நகைக் கடன், சிறு குறு மத்திய தொழில் கடன் என 2270 பயணிகளுக்கு சுமார் 10 கோடியே 70 லட்சம் ரூபாய் கடன் அமைச்சர் வழங்கினார்.

*முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,* இந்திய அளவில் கூட்டுறவு துறையில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது கூட்டுறவு துறைக்கு கடந்த ஆண்டு மத்திய அரசின் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விருது பெற்றுள்ளதாக தெரிவித்தார்,

மேலும் திமுக ஆட்சியில் 9,163கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டது என்றும், ஆனால் அதிமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 27000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். அதேபோல் திமுக ஆட்சியில் கந்து வட்டி , மீட்டர் வட்டி என பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது. ஆனால் அதுபோன்ற பிரச்னைகள் அதிமுக ஆட்சியில் இல்லை.

2015ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னையில் வெள்ளப்பெருக்கின் காரணமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. வியாபார பாதிக்கப்பட்டு தொழில்கள் முடக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

*அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,* கூட்டுறவு தேர்தலில் யார் தவறு செய்தாலும் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.

எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான சரவணன் பேரவைக்கு மாஸ்க் அணிந்து வந்தது ஏற்க முடியாது என்றும், ஒரு மருத்துவரே இதுபோன்று நடந்து கொண்டால் அதனை விற்கும் வியாபாரிகள் அதன் விலையை கூடுதல்படுத்தி தான் விற்பார்கள் என்றார். எனவே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு முதல் இது வரை கூட்டுறவு துறை சார்பாக சுமார் 7கோடியே 40லட்சம் பயனாளிகளுக்கு சுமார் 3லட்ச 66,939 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில் 27 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு கடன் வழங்கி உள்ளதாகவும் இந்த ஆண்டு 11 ஆயிரம் கோடி கடன் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் காய்கறி உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்த குறுகிய கால வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்,

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் முதற்கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அதில் உள்ள சில தொழில்நுட்ப கோளாறுகள் இருக்கிறது அதுவும் சரி செய்யப்பட்டு வருகிறது என்றார். இந்நிலையில் இதன் மூலம் ஏழை மக்கள், வெளி மாநிலங்களில் வேலை செய்யும் மக்கள் என அனைவரும் பொருட்களை எளிய முறையில் வாங்கிக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி சட்ட விதிகளுக்கு உட்பட்டு தமிழகத்தில் விலையில்லா அரிசியும், மற்ற மாநிலங்களில் விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படுகிறது அதற்கேற்ப அரிசி வழங்கப்படும் எனக் கூறினார். அதேபோன்று எவ்வளவு பொருட்கள் வேண்டும், இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிந்து அவ்வப்போது சேமித்து வைக்கப்படும். எனவே ஸ்மார்ட் கார்டு திட்டத்தின் மூலம் யார் பொருட்கள் பெற்றுள்ளார்கள் என்பது பதிவு செய்யப்படுவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *