கட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி

உடலுழைப்பு குறைந்து, தொலைதூரத்தில் இருந்து உட்கார்ந்தவாறே பணியாற்றுவது அதிகமாகிப்போன சூழலில், இரவில் இணைய வசதி மிதமிஞ்சிய அளவும் கிடைப்பதும் ஓடிடி தளங்கள் பெருகியிருப்பதும் டேட்டாவை அதிகம் பயன்படுத்துவதற்கான தேவையை உருவாக்கியிருக்கின்றன. இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய, எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், எவ்வித எக்ஸ்ட்ரா கட்டணமும் இல்லாமல் அன்லிமிடெட் அதிவேக இரவு நேர டேட்டா வசதியை அறிவித்துள்ளது வீ (Vi). இதன்மூலம் வீ-யின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.249 மற்றும் அதற்கு மேலே ரீசார்ஜ் செய்வதன் மூலம் இரவு 12:00 மணி முதல் 6:00 மணி வரை அனைத்து வீ அன்லிமிடெட் வசதியைப் பெறலாம்.

 

நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட உலகில் மொபைல் இணைய வசதி ஆக்சிஜன் போன்றாகியுள்ளது. அதற்கேற்றவாறு, வீ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் போனஸ் அன்லிமிடெட் அதிவேக இரவு நேர டேட்டா வசதி, அவர்களது நேரத்திற்கும் வாழ்விற்கும் அதிகமாகப் பங்களிக்கிறது. தற்போது, வீ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் நாள் முழுவதும் வரைமுறை ஏதுமின்றி தகவல்களைப் பெறுகின்றனர். நீண்ட வீடியோ கால்கள் மூலமாகப் பிரியமானவர்களோடு இணைப்பில் இருக்கின்றனர். அதோடு, தினசரி டேட்டா வரம்பு தீர்ந்துவிடுமென்ற கவலை ஏதுமில்லாமல் பதிவிறக்கம் செய்வதைத் தொடர்கின்றனர்.

 

அது மட்டுமல்லாமல், வார இறுதி டேட்டா ரோல்ஓவர் பலன்களையும் வீ வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். இதன் மூலமாக, ரூ.249 மற்றும் அதற்கு மேலுள்ள அனைத்து அன்லிமிடெட் தினசரி டேட்டா பேக்குகளால் இரவு முழுவதும் இணையத்தைப் பயன்படுத்துவதோடு, பயன்படுத்தப்படாத டேட்டாவை வார இறுதியில் சேர்த்து வைத்துப் பயன்படுத்துகின்றனர்.

 

வாடிக்கையாளர் பிரிவுகளில் டேட்டா பயன்படுத்தும் முறைகளை பொறுத்து, இரவு நேரத்தில் இளைய தலைமுறையினர் அதிகளவில் டேட்டா பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இத்துறையில் முதன்முதலாக, அன்லிமிடெட் அதிவேக இரவு நேர டேட்டா மற்றும் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் இரண்டையும் சேர்த்து வழங்கி தனது அன்லிமிடெட் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்குகிறது வீ. நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்களைத் தக்க வைப்பதையும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதையும் இந்த புதிய முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இணையத்தில் இருப்பதற்கும், வேறுபட்ட ஓடிடி பயன்பாடுகளில் இருந்து வெவ்வேறு உள்ளடக்கங்களை பதிவிறக்கம் செய்வதற்கும், வீ மூவிஸ் மற்றும் டிவி செயலியில் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமீபத்திய திரைப்படங்கள், ஒரிஜினல் இணைய வீடியோக்கள் உள்ளிட்ட பலவற்றைக் கண்டு களிப்பதற்கும் இந்த அன்லிமிடெட் அதிவேக இரவு நேர டேட்டாவை பயன்படுத்தலாம். 10 மில்லியனுக்கும் மேற்பட்ட வீ சந்தாதாரர்கள் இதனைப் பதிவிறக்கம் செய்து, 13 மொழிகளில் 9,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 400-க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களைக் காண்கின்றனர். அனைத்து வகைகளிலும் உள்ள ஒரிஜினல் வெப் சீரிஸ்கள் மற்றும் சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும்.

 

ஓக்லா (Ookla) அளித்த சமீபத்திய அறிக்கையின்படி, 2020 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதும் அதிவேகமான 4ஜி நெட்வொர்க் ஆக வீ ஜிகா நெட் (GIGA net) இருந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *