டாக்டர் எஸ்.குருநாதன், ஒருங்கிணைந்த இடுப்பமைவு சிறப்பு சிகிச்சை மையத்தை, சென்னை ஜெம் மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.

 

 

 

ஜெம் மருத்துவமனையில் இடுப்பமைவு சிகிச்சை மையம் துவக்கம்

தமிழ்நாட்டில் முதல்முறையாக சிறப்பு மருத்துவ மையம்

சென்னை மருத்துவ இயக்குனர் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் டாக்டர் எஸ்.குருநாதன், ஒருங்கிணைந்த இடுப்பமைவு சிறப்பு சிகிச்சை மையத்தை, சென்னை ஜெம் மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.

சிகிச்சைகளில் சிறப்பான முறைகளை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து மருத்துவ சேவையாற்றி வரும் ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி. பழனிவேலு, டாக்டர் குழுவினரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.

ஜெம் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிறுவனர் டாக்டர் சி. பழனிவேலு கூறுகையில், ‘‘இடுப்பமைவு ஒழுங்கின்மையானது, தெளிவானதாகவும், எளிதில் கண்டறியக் கூடியதாகவும் இருக்கும். அதோடு, இந்த பிரச்னைகளோடு பல்வேறு உறுப்புகளும் தொடர்புடையதால், பல குழுக்களின் தேவையும் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, இடுப்பமைவு பிரச்னைகள், சிறுநீர் பை பெரிதாகுதல், சிறுநீர் அடங்காமை, இடுப்பு அருகில் உள்ள உள்ளுறுப்பு பிறழ்தல், மற்றும் மலக்குடல் சிக்கல் போன்றவை ஏற்படுகிறது. பல்நோக்கு, புனிதமிக்க அணுகுமுறை அவசியமானது என்பதை உணர்ந்து சிறப்பு மையத்தை ஏற்படுத்தியுள்ளோம்” என்றார்.
.
இந்த நோயானது, சமுதாயம், பொருளாதாரம், உடலியல் மற்றும் மனரீதியான பிரச்னைகளை, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுத்துவதோடு, வாழ்க்கை தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, திடீர் வலியை அடிக்கடி உண்டாக்குகிறது. பொதுவாக பெண்கள், இந்த பிரச்னைகளை வெளியே கூற தயங்கி அமைதியாக இருந்து விடுகின்றனர். இது, முறையான சிகிச்சைபெற தேட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. ஜெம் இடுப்பமைவு சிகிச்சை மையமானது பொது மக்களிடையே இந்த பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சரியான நேரத்தில் சிகிச்சை பெறவும் வாய்ப்பளிக்கிறது,’’ என்றார்.

சென்னை ஜெம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் எஸ். அசோகன் கூறுகையில், ‘‘ வயதாகும்போது இடுப்பமைவு தசைகளில் ஏற்படும் பலவீனத்தால், ஒழுங்கின்மை ஏற்படுகிறது. சென்னை ஜெம் மருத்துவமனையில் இதற்கான பரிசோதனையுடன், சிறப்பான சிகிச்சை அளிக்கும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ குழுவினரும் உள்ளனர். இந்த வசதி குடல்நோய் சிகிச்சை நிபுணர்கள், குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு மருத்துவர்கள், சிறுநீரகவியலாளர்கள், வலி நீக்கும் சிறப்பு நிபுணர்கள் மற்றும் உயிரி பின்னுாட்ட பயிற்சியாளர்கள் என பல்துறையினர் ஒரே கூரையின் கீழ் செயல்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *