இந்தியா முழுவதும் 100 கல்லூரிகளில் இருந்து 5,000 சிறப்பு பொறியாளர்களை தொழில்துறைக்கு தயார்படுத்துகிறது, வெர்ட்டுஸா

 

 

இந்தியா முழுவதும் 100 கல்லூரிகளில் இருந்து 5,000 சிறப்பு பொறியாளர்களை தொழில்துறைக்கு தயார்படுத்துகிறது, வெர்ட்டுஸா

‘ஹெட்ஸ்டார்ட் 2021’ என்ற வருடாந்திர இன்ஜினியரிங் அகாடமியா கனெக்ட் திட்டத்தை ஏற்பாடு செய்கிறது

சென்னை, தமிழ்நாடு – (நவம்பர் 25, 2021) -வெர்ட்டுஸா கார்ப்பரேஷன், டிஜிட்டல் உத்திகள், டிஜிட்டல் இன்ஜினியரிங் மற்றும் ஐடி சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கப் பொறியியல் மூலம் சந்தைகளை மாற்றியமைக்க உதவும் தீர்வுகள் ஆகியவற்றை தரும் உலகளாவிய வழங்குநராகும். அதன் 7வது இன்ஜினியரிங் அகாடமியா கனெக்ட் நிகழ்ச்சியான “ஹெட்ஸ்டார்ட் 2021” சென்னையில் நடைபெற்றது. 100 கல்லூரிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இந்த ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டனர், அங்கு அவர்கள் மறு-திறன் மற்றும் பயிற்சி தொடர்பான தற்போதைய தொழில்துறை தேவைகள் பற்றி விவாதித்தனர். மேலும் மாணவர்களை வேலைக்கு தயார்படுத்துவதற்கு கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை சுட்டிக்காட்டி பேசினர். நிகழ்வில், வெர்ட்டுஸா இந்த தனித்துவமான, அதன் வளாக இணைப்புத் திட்டத்தில் மேலும் 32 கல்லூரிகளைச் சேர்ப்பதாக அறிவித்தது. இது 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சென்றடைய உதவுகிறது. பிரபல நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் சிறந்த பேச்சாளரான ஆஷிஷ் வித்யார்த்தி, “உங்கள் திறனைக் கண்டறிதல்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட, வெர்ட்டுஸாவின் தலைமை மக்கள் அதிகாரி சுந்தர் நாராயணன் பேசுகையில், “புதுமைகளை சமநிலைப்படுத்துதல் மற்றும் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துகிறது. பணியாளர்களை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான செயல்முறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வெர்ட்டுஸாவின் த்ரைவ் அகாடமி மூலம் இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய நிகழ் நேர பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ஆகியவற்றை க்ராஜூவேட் டேலண்ட் ப்ரோக்ராம் மூலம் ஹெட்ஸ்டார்ட் எனப்படும் எங்கள் வளாக இணைப்பு திட்டத்தின் மூலம் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் CoEs (சென்டர்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ்) ஏற்பாடு செய்கிறோம்” எனத் தெரிவிதார்.

“கோவிட்-19க்குப் பிந்தைய பணியின் எதிர்காலத்திற்காகத் தயாராகுதல்” என்ற குழு விவாதத்தில், ராமச்சந்திரன் மீனாட்சிசுந்தரம் – வெர்ட்டுஸாவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, வெங்கடேஷ் டி.கே – மூத்த துணைத் தலைவர் மற்றும் உலகளாவிய விநியோகத் தலைவர் (எச்.எல்.எஸ்), டாக்டர் ஏ.வி. பட்டீல் – பிரின்சிபல் டி.ஒய். பட்டீல் நிறுவனம், திரு. ராமன். பாத்ரா – நொய்டா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி நிர்வாக துணைத் தலைவர் மற்றும் திருமதி பூர்ணிமா வெங்கட், பேராசிரியர் டி.ஏ. பை மேலாண்மை நிறுவனம் ஆகியோர் கலந்து கொண்டனர். குழு பங்கேற்பாளர்கள் பணியிடத்தின் எதிர்காலம் மற்றும் முக்கிய திறமைப் போக்குகள் குறித்து விவாதித்தனர். வெர்ட்டுஸா பணியாளர்களுடன் கூடுதலாக 5000 மாணவர்களுக்கு மத்தியில் உரையாடினர். கேம்பஸ் சிஓஇ அசோசியேஷனில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்த ஆறு கல்லூரிகளுக்கும் இந்நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டது.

“இன்றைய ஆற்றல்மிக்க தொழில் சூழலில், ஐடி துறையின் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிய விரிவான அறிவை மாணவர்களை நாம் கற்பிக்க வேண்டும், இது ஒரு தொழில்துறைக்கு, திறமையான பணியாளர்களை உருவாக்குகிறது. வெர்ட்டுஸாவின் தொழில்நுட்ப திறன்கள் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள முன்னணி கல்லூரிகள் மற்றும் எங்கள் CoE (மையங்களில்) திட்டம் மூலம் சிறந்த திறமைகளை பணியமர்த்துவதற்கும், அவர்களை வெற்றிக்குத் தயார்படுத்துவதற்கும் உதவுகிறது. திறமையின் மீதான இந்த கவனம் ஊழியர்களின் அனுபவத்தில் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்” என்று நிகழ்வில் கலந்து கொண்ட வெர்ட்டுஸாவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராமச்சந்திரன் மீனாட்சிசுந்தரம் கூறினார்.

இந்த ஆண்டு, ஹெட்ஸ்டார்ட் திட்டம், 32 புதிய கல்லூரிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது, மேலும் மாணவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப்களையும் வழங்குகிறது. இது வேகமான வேலைச் சூழல்களில் நிகழ்நேர திட்ட வெளிப்பாடுகளை குறித்து அவர்களுக்கு கற்பிக்கும். ServiceNow, Microsoft Azure மற்றும் Augmented Intelligence led Managed Services ஆகிய மூன்று கூடுதல் முக்கிய தொழில்நுட்பங்களில் CoE-ஐ திறப்பதற்கான கூடுதல் திட்டங்களுடன், இந்த புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் நன்கு புரிந்துகொண்டு அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பளிப்பதை ஹெட்ஸ்டார்ட் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *