தென்னிந்தியாவில் தடம் பதிக்கும் ஆர்டியம் அகாடமி

தென்னிந்தியாவில் தடம் பதிக்கும் ஆர்டியம் அகாடமி :

இசை மேஸ்ட்ரோக்களான திருமதி சித்ரா திருமதி அருணா சாய்ராம் மற்றும் ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோரை கல்விக்குழுவுக்கு வரவேற்பு

ஆன்லைன் இசை மற்றும் கம்யூனிட்டி தளமான ஆர்டியம் அகாடமி அமைப்பானது இன்று தனது தென்னிந்திய இசை கற்றல் படிப்புகளை துவங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் ஆர்டியம் கல்வி அமைப்பின் புதிய உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,

  • திருமதி. கே.எஸ்.சித்ரா, தலைவர், தென்னிந்திய பிரபல திரைப்பட இசை

  • திருமதி. அருணா சாய்ராம், ஆசிரியத் தலைவர், கர்நாடக பாரம்பரிய இசை

  • திரு. ஆனந்த் வைத்தியநாதன், கல்வியியல் தலைவர் மற்றும் ஆசிரியர் தலைவர் – குரல் பயிற்சி

இசைத் துறையின் வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட தனித்துவமான செயல்திறன் சார்ந்த இசைப் படிப்புகளை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது ஆர்டியம் அகாடமி.  இசைக் கற்றலில் கலாச்சார ரீதியாக ஆழமாக வேரூன்றிய இந்தியா மற்றும் உலகெங்கிலும் பரவியுள்ள தென்னிந்திய புலம்பெயர் மக்களுக்கு இது உதவுகிறது.

ஆர்டியம் அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் ஜோஷி பேசும்போது, “ தென்னிந்தியாவானது அற்புதமான இசை மரபுகள், திறமை, படைப்பாற்றல், புதுமை, கற்றல் மற்றும் வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் அனைத்துமே கலைகளை கடவுளின் வெளிப்பாடுகளாக மதிக்கிறார்கள். இந்த இடத்தில், கலைஞர்கள் இசையைப் பின் தொடர்வதை பெருமையாக கருதுகிரார்கள்.  இத்தகைய சிறப்புமிக்க  தென்னிந்தியாவிற்கு, ஆர்டியம் அகாடமி தொழில்நுட்ப ஆதரவு, செயல்திறன் சார்ந்த இசைப் பயிற்சியின் தனித்துவமான தளத்தை கொண்டு வருவதை பாக்கியமாக உணர்கிறது. தவிர, உலகெங்கிலும் உள்ள ஆர்வமுள்ள கற்கும் மாணவர்களிடையே தங்கள் இசையின் மீதான அன்பை வழங்கும் வகையில், கல்விக் குழுவின் ஒரு பகுதியாக திருமதி.கே.எஸ்.சித்ரா, திருமதி.அருணா சாய்ராம் மற்றும் திரு.ஆனந்த் வைத்தியநாதன் ஆகிய மூன்று பேரையும் கல்விக் குழுமத்துடன் இணைத்திருப்பது பெருமைக்குரியது. இந்த மேஸ்ட்ரோக்களின் தலைமையின் கீழ், பிரபலமான மற்றும் இலகுவான இசை வகைகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.  ஆர்டியம் அகாடமியில், ஆர்வமுள்ள பயிற்றுவிப்பாளரிடமிருந்து, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வி கிடைப்பது உறுதி.  ஸ்வர, தாளம், ராகம், வடிவம் மற்றும் மேம்பாடு ஆகிய பாரம்பரிய நுட்பங்களில் பயிற்சி கிடைப்பது மட்டுமின்றி, மாணவர்கள் குரல், திறமை மற்றும் செயல்திறன் பயிற்சி மற்றும் அவர்களின் சொந்த கலைத் தனித்துவத்தைக் கண்டறிய வழிகாட்டுதல் ஆகியவற்றைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  எங்கள் இலக்கு மாணவர்களுக்கு இசை பற்றிய முழுமையான அறிவை வழங்குவது மட்டுமல்ல, அவர்களை உண்மையான கலைஞர்களாக மாற்றுவதும் ஆகும்” என்று கூறினார்.

இது குறித்து கே.எஸ்.சித்ரா கூறும் போது, “ திறமை என்பது கடவுள் கொடுத்தது. ஆனால் அறிவு, திறன் மேம்பாட்டு நுட்பங்கள், தரநிலைகள் மற்றும் இசை மதிப்புகள் பற்றிய புரிதல் ஆகியவை அனைத்தும், முறையான பயிற்சியின் மூலம் மட்டுமே வர முடியும். ஆர்டியம் அகாடமியின் கல்வியியல் மூலமாக என்னுடைய வாழ்நாள் அனுபவத்தை தர முடியும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தவிர, புதுமையான முன்முயற்சிகள், இன்று மாறிவரும் பிரபலமான இசை சூழ்நிலையில் மாணவர்களின் பல்வேறு வகையான கற்றல் அம்சங்களை பெறும் விதமாக பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.

அருணா சாய்ராம் அவர்கள் கூறும்போது, “ கர்நாடக இசை என்பது தலைமுறைகளின் அசாதாரண உத்வேகம், அர்ப்பணிப்பு, இலட்சியங்களுக்கு சரணடைதல் மற்றும் தெய்வீகமாக ஈர்க்கப்பட்ட படைப்பாற்றலைக் கொண்டிருத்தல் ஆகியவற்றின் படிநிலைகளாகும். குரு சிஷ்ய பரம்பரையின் பாதுகாவலனாக இக்கலையில் உயர்நிலைப் பயிற்சி இன்றும் தொடர்கிறது. ஆயினும்கூட, பாரம்பரிய பயிற்சியின் மதிப்புகளானது கொள்கை அடிப்படையிலான நிறுவன அமைப்புகளில் கைப்பற்றுவதற்கும், சிறந்த முடிவுகளை அடைவதற்கும் நாம் தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  இதுவே, ஆர்டியம் பற்றிய எனது பார்வை” என்றார்.

ஸ்ரீ அனந்த் வைத்தியநாதன் கருத்துத் தெரிவிக்கையில், “ மனித இனம் பாடும் இனம். மனிதக் குரல் பாடும் குரல்.  நீங்கள் ஒரு மனிதர் – எனவே நீங்கள் பாடலாம். ஒருவரின் இயல்பான பாடும் திறனைத் திறந்து, வளர்ச்சி மற்றும் சுய வெளிப்பாட்டின் பாதையில் வைப்பது, எந்தவொரு இசை ஆர்வலரும் அல்லது ஆர்வமுள்ளவரும் பெறக்கூடிய மிகப்பெரிய பரிசாகும்.  ஆர்டியம் அகாடமி மூலம் இந்த உண்மையையும் குரல் வளர்ச்சிக்கான முழு அறிவியலையும் அனைத்து நிலை ஆர்வலர்களுக்கும் கொண்டு வர முடிந்ததை நான் பாக்கியமாக உணர்கிறேன்.” என்றார்.

அகாடமியானது  தொழில்துறையின் புகழ்பெற்ற பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளரான சோனு நிகம்  மற்றும் இந்தியாவின் முன்னணி குரல் நிபுணரும் அகாடமியின் கல்வியியல் தலைவருமான ஸ்ரீ அனந்த் வைத்தியநாதன் ஆகியோரைக் கொண்டுள்ளது. இதன்மூலம், இசை சார்ந்த கல்விக் கொள்கை மற்றும் அங்கீகார செயல்முறையை வடிவமைத்துள்ளது.  மேலும், ஆர்டியம் கல்வியியல் அமைப்பில்  சுபா முத்கல் (இந்துஸ்தானி கிளாசிக்கல்), அருணா சாய்ராம் (கர்நாடக இசை), கே.எஸ்.சித்ரா (தென்னிந்திய பிரபல திரைப்பட இசை), லூயிஸ் பேங்க்ஸ் (கீபோர்டு), அனீஷ் பிரதான் (தபேலா), ராஜு சிங் (கிட்டார்) மற்றும் ஜினோ பேங்க்ஸ் (டிரம்ஸ்) போன்ற துறை சார்ந்த இசை மேஸ்ட்ரோக்கள் இடம்பெற்றுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் இசையை கேட்பது மட்டுமின்றி, கற்பதையும் நோக்கமாக கொண்டு இந்த தளம் இயங்கிவருகிறது. அதன்படி, இசை மேஸ்ட்ரோக்கள் வடிவமைத்த சிறப்புமிக்க செயல்திறன் சார்ந்த பாடத்திட்டத்தின் மூலம் எளிமையாக இசையைக் கற்கலாம். அதுவும், டிஜிட்டல் மேடையில் சான்றளிக்கப்பட்ட ஆசிரியர்களால் 1:1 வீதம் கற்பிக்கப்படுகிறது, இது கற்பவர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட டாஷ்போர்டு, கற்றல் கருவிகள், கற்றல் வரைபடங்கள், பார்வையாளர்கள் மற்றும் பயிற்சி ஸ்டுடியோவை நேரலை செய்ய விர்ச்சுவல் ஆடிட்டோரியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

ஆர்டியம் அகாடமி என்பது இந்தியாவின் முதல் ஆன்லைன் இசை சார்ந்த அகாடமி ஆகும், அதுவும், இசைத் துறையில் இயங்கிவரும் இசைக் கலைஞர்களைக் கொண்டு இயங்குவது இதன் ஹைலைட்ஸ்.  ஆர்டியம் அகாடமியின் தளத்தில் வயதினைக் கொண்ட மாணவர்களும் நேரலை மற்றும் ஊடாடும் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம், அவை அகாடமியால் பயிற்றுவிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்ட உயர் தகுதி வாய்ந்த இசை ஆசிரியர்களால் வழங்கப்படும்.

அனைவருக்கும் ஏற்ற நெகிழ்வான அட்டவணையுடன் கூடிய உயர்தர வீடியோ விரிவுரைகளை வழங்குவது, ஆர்டியம் அகாடமி ஆனது இசையைக் கற்பதை மேலும் எளிதாக்க முயற்சிக்கிறது.  ஒளிமயமான மற்றும் இசைசார்ந்த எதிர்காலத்தை நோக்கிய ஒரு படியாக இந்தப் படிப்புகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *