தாம்பரம் தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்
தாம்பரம் தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் 18.02.2017 அன்று நடைபெற்றது. இதனை கல்லூரியின் தாளாளர் டாக்டர் வி.பி.இராமமூர்த்தி அவர்கள் துவக்கி வைத்தார் இவ்வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாடு மாணவர்கள் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா மாற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்தும் 3000த்துக்கும் மேற்பட்ட பொறியியல் ,கலை மற்றும் அறிவியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். HTC,பிரிட்டானிய, பேட்டியம் மற்றும் அஸஞ்சர் ஆகிய 40-க்கும் மேற்ப்பட்ட முன்னனி நிறுவனங்களும் மருத்துவம், வங்கி,இன்சூரன்ஸ் மற்றும் தொழில் துறையை சார்ந்த பல நிருவனங்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றன 2013-14> 2014-15> 2015-16> 2016-17 ஆகிய கல்வி ஆண்டில் படித்த பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி பயின்ற மாணவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர் தனலட்சுமி பொறியியல் கல்லூரியின் சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவும் போக்குவரத்து வசதியுடன் கொடுக்கப்பட்டது இந்த வேலைவாய்ப்பு முகாமில் 1000த்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டன.