பாலிமர் தொலைக்காட்சி நிருபர் மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதலை கண்டித்து தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் மாநில தலைவர் முனைவர் திரு .க.குமார் அவர்கள் பேட்டி

கருத்து சுதந்திரத்தின் கழுத்து நெறிக்கப்படுவதற்கு தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளார்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்பாட்டம் :

பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர் சந்திரன் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

மதுரை பாலிமர் டிவி செய்தியாளராக பணியாற்றி வருபவர் சந்திரன் இவர் வசிக்கும் பகுதியில் சமூக விரோதிகளால் கஞ்சா போதை வஸ்து விற்கப்படுவதை தடுத்து நிறுத்திட அதனைப்பற்றிய செய்தி வெளியிட்டதோடு அவர்கள் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார் இதனால் ஆத்திரமடைந்த சமூக விரோதிகள் அவரை கத்தியால் குத்தியதோடு அவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர் இதனைக் கண்டித்து தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஊடகத்துறையினர் சென்னையில் சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், சங்க தலைவர் முனைவர் க.குமார் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய தலைவர் க.குமார் அவர்கள்,

செய்தியாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதியினை காவல்துறையினர் ஏற்படுத்த வேண்டும் கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர் இந்த ஆர்பாட்டத்திற்கு சங்க மாநில துனைத் தலைவர் க.குரு, மா.து.பொதுச் செயலாளர் நியாஸ் நூர்தீன், மூத்த பத்திரிகையாளர் தஞ்சை தமிழ்பித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் காஞ்சி முத்து தென் சென்னை மாவட்ட லைவர் மணிவண்ணன் உட்பட ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *