ஈஷா யோகா விழா: பிரதமர் வருகைக்கு தொடரும் எதிர்ப்பு
கோவை மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரியை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி அதை நாளை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஈஷா யோகா மையம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதால், அந்த விழாவில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என்று சுற்றுச்சூழல் அமைப்புக்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் வந்தால் கறுப்புக் கொடி காட்டுவோம் என்றும் எச்சரித்துள்ளன.
இதுதொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகள் அந்த மையத்தில் வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் கடுமையாக மேற்கொள்ளப்பட்டன.
ஈஷா யோகா மைய விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்