இஸ்லாமியத் தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கை மோசூலில் தீவிரம்
மோசூல் நகரில் ஐ எஸ் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பினரை வீடுவீடாகத் தேடும் நடவடிக்கையை இராக்கிய இராணுவம் எடுத்து வருகிறது.
அந்த அமைப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை அரச படையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடையே இராக்கியப் படையினர் மோசூல் விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளனர்.