சென்னை, 11 ஏப்ரல் 2017 – தூய்மையான தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கான வழிமுறைகளிலும், சக்தி ஆற்றல் அம்சங்களிலும் தொடர்ந்து தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கிவரும் வகையில் ஸ்நைடர் எலெக்ட்ரிக் இந்தியா, இன்று மிகக்குறைந்த செலவிலான அதிக எதிர்விளைவுகளை உண்டாக்காத தொழில்நுட்பங்களை கண்காட்சிக்கு வைத்திருக்கிறது. இவை அனைத்தும், உலகம் முழுவதும் படகில் பயணம் மேற்கொண்டு வரும் ‘நோமட் டெஸ் மெர்ஸ்’ குழுவினரின் படகில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவினரின் பயணமானது, 2015-ல் ஃப்ரான்ஸ் நாட்டில் இருக்கும் ‘பிரிட்டானி’யில் ஆரம்பித்தது. இந்தோனேஷியாவில் தனது பயணத்தை முடிக்கவிருக்கும் இப்படகு பயணம் 11 ஏப்ரல் 2017 அன்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. மொராக்கோ, செனகல், க்யானா பிஸ்ஸாவ், கேப் வெர்டே, ப்ரேசில், தென்னாப்பிரிக்கா, மடகாஸ்கர், மொசாம்பிக், மாலதீவுகள், இலங்கை ஆகிய நாடுகளுக்கு பிறகு எதிர்விளைவுகளை உண்டாக்காத, குறைந்த தொழில்நுட்பங்களால் கட்டமைக்கப்பட்ட சென்னைக்கு வந்திருக்கிறது. ’இஜிஸ் ஆஃப் ஃபோண்டேஷன் டி ஃப்ரான்ஸ்’ (aegis of Fondation de France) வழிக்காட்டலின் கீழ் வரும் ஸ்நைடர் எலெக்ட்ரிக் ஃபவுண்டேஷன்’ (Schneider Electric Foundation) அறக்கட்டளையானது குறைந்த தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சிகளையும், அவற்றை ஊக்குவிக்கவும் கூடிய ‘நோமேட் டெஸ் மெர்ஸ்’ குழுவினர் பயணம்’ (Nomade des Mers expedition) மூலம் குறைந்த தொழில்நுட்பங்கள் மீதான ஆராய்ச்சிகள் மற்றும் குறைந்த தொழில்நுட்பங்களை (low technologies -low tech). ஊக்குவிப்பது ஆகியவற்றில் தனது ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகிறது. ’நோமட் டெஸ் மெர்ஸ்’ திட்டத்தின் நோக்கமானது, பயன்பாடுகள் அதிகமுள்ள, சுற்றுச்சூழலுக்கு உகந்த, எளிதில் கிடைக்கிற தொழில்நுட்பங்களான ‘குறைந்த தொழில்நுட்பங்களை’ மக்களுக்குச் சென்றடைவதற்காக கண்காட்சி படுத்துவது ஆகும். குறைந்த தொழில்நுட்பங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த படகானது, உலகை கடந்த மூன்று ஆண்டுகளாக சுற்றிவருகிறது. இந்த உலகப்பயணத்தின் போதே தனித்து செயல்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச குறைந்த தொழில்நுட்ப பங்குதாரர்கள், பயன்படுத்துனர்களை அதிகப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இப்பயணத்தின் போதே, எதிர்விளைவுகளை உண்டாக்காத குறைந்த தொழில்நுட்ப கருவிகளை ஆய்வுக்கு உட்படுத்தியும், அவற்றை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவந்து, அதை மற்றவர்களுடன் இணைத்து அதன் மூலம் தாமாகவே நிலைத்து செயல்படத்தக்க சூழலை உருவாக்குவது குறித்து மதிப்பிடப்படுகிறது. இப்பயணம் குறித்து, ஸ்நைடர் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆஃபர் க்ரியேஷன் மற்றும் கவர்ன்னன்ஸ் பிரிவின் துணைத் தலைவர் திரு. நதின் பூக்யான் (Nadine Bouquin, Vice-President Offer Creation & Governance, Schneider Electric) கூறுகையில், ‘’ஸ்நைட்ர் எலெக்ட்ரிக் அறக்கட்டளை, சக்தி திறன் வாய்ந்த குறைந்த தொழில்நுட்ப இந்த திட்டத்தின் முக்கிய புரவலராக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். ஸ்நைடரின் முக்கியமான நோக்கத்தை போலவே, பசுமையான சுற்றுச்சூழலுடன் கூடிய எதிர்காலத்திற்கான தீர்வுகளை அளிக்கும் வாய்ப்புகளாக அமைந்திருக்கும் நிலைத்து இருக்கும் தன்மைகொண்ட குறைந்த தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் விஷயத்தில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, அதை மக்களிடையே பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதால் ஸ்நைடர் இதற்கு ஆதரவு வழங்கி வருகிறது. மக்கள் முத்திரை பதிக்கும் இத்தகைய திட்டங்கள் நிச்சயம், ஒரு மாற்றத்தை உருவாக்கும். அது உலக அளவில் மாறிவரும் தட்பவெப்ப நிலை மாறுப்பாட்டுக்கான தீர்வுகளை வழங்குவதில் ஒரு முன்னேற்ற படியாகவும் அமையும் என நம்புகிறோம்’’ என்றார். சென்னை துறைமுகத்தில் இப்படகின் வருகையை கொண்டாடும்விதமாக, சென்னை ஸ்நைடர் எலெக்ட்ரிக் உற்பத்தி நிலையம், தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள், பயிற்சி பெறுபவர்கள், பொறியியல் மாணவர்கள் ஆகியோர்களுக்கு புதுமையான தொழில்நுட்பங்கள் குறித்த போட்டிகளை நடத்தியது. இப்போட்டியின் நோக்கம், பசுமையான எதிர்காலத்திற்கான புதுமையான குறைந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவது ஆகும். இப்போட்டியில் வெற்றி பெறும் தீர்வு, இப்படகில் பார்வைக்கு வைக்கப்படும். அதன் பிறகு இப்படகு தனது உலகப் பயணத்தை தொடரும். ஸ்நைடர் எலெக்ட்ரிக் இந்தியாவின் ஆய்வு மற்றும் மேம்பாடு பிரிவின் தலைவர் திரு. ரமேஷ் பதக் கூறுகையில், ‘’குறைந்த பொருளாதாரத்துடன் கூடிய குறைந்த தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்துவது, தனிநபர் பயன்பாட்டில் குறைந்தளவு ஆற்றலைப் பயன்படுத்தும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிக அருமையான தீர்வாக அமையும். குறைந்த தொழில்நுட்பங்கள் மிகவும் எளிமையானவை. மலிவானவை. அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையில் எளிதில் வடிவமைக்கப்பட கூடியவை. நாம் வசிக்கும் சுற்றுச்சூழலுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இருப்பவையாகும். குறைந்த செலவிலான தொழில்நுட்ப முன்மாதிரிகள், தனித்திருக்கும் அல்லது ஆற்றல் இல்லாத பகுதிகளின் ஆற்றலுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும். மேலும் இந்தியாவை ஆற்றல் ஏற்றுமதி செய்யவும் முன்னேற்றமடைய உதவும்’’ என்றார் திரு. பதக். எர்ஜி டைலெம்மா’ பற்றி விவரிக்கையில் திரு பதக், ‘’சுற்றுச்சூழலில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய மிகவிரைவாக வளர்ச்சிக்கண்டு வரும் மூலப்பொருட்கள் விஷயத்தில், இவை குறித்து விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும் கூட தெளிவாக தெரியக்கூடியதாகவோ, காணக்கூடியதாகவோ, இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. இகாமர்ஸ், மெய்நிகர் எனப்படும் வர்ச்சுவல் ரியாலிட்டி, ரிமோட் சேவைகள், பிக் டேடா, ரிமோட் கொலாபரேஷன், மொபிலிட்டி, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ், முதலியன உள்ளிட்ட ‘பார்த்திராத’ தொழில்நுட்பங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவைகளாகவே இருக்கின்றன. ஆனால் இதன் பயன் அடையும் பயனாளி அருகில் இருப்பதில்லை. வேறெங்கோ இருந்தபடியே அதன் பயனைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில், ஆய்வுகளின் மூலம் வெற்றி கண்ட தீர்வுகள், முன்மாதிரியாக வடிவமைக்கப்பட்டு, நிபுணர்களை நடுவர்களாக கொண்ட குழுவின் ஒப்புதலுக்கு அனுப்படும். அதாவது, ஒவ்வொரு தனிநபருக்கும், இத்துறையில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் தொழிலதிபர்கள், மக்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில், நீண்டகால பலனளிக்கும் வகையில் ‘செய்முறை காணொலி’ லைப்ரரி உருவாக்கும் பொருட்டு இவை மேற்கொள்ளப்படும். நோமெட் டெச் மெர்ஸ்-ன் நிதி, தொழில்நுட்ப மற்றும் மனிதவள புரவலராக ஆதரவளித்து வரும் ஸ்நைடர் எலெக்ட்ரிக் அறக்கட்டளை, ஸ்நைடர் எலெக்ட்ரிக் பணியாளர்களில் திறன் பெற்றவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளித்து, நிபுணத்துவமுள்ளவர்களாக்கி இப்பயணத்திற்கு அனுப்பும். ஒவ்வொரு நிறுத்தத்திலும், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் ஸ்நைடர் எலெக்ட்ரிக் ஆசியர்களின் குழுவும் கலந்து கொள்ளும். அங்கு அவர்கள் தங்களது அறிவு மற்றும் அனுபவத்தை தங்களது திறனோடு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பார்கள். இதற்கும் கூடுதலாக, அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், ஸ்நைடர் எலெக்ட்ரிக்கின் ‘எடிசன்’ அடையாளப் பட்டம் பெற்றவர்கள், குறைந்த தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்களுக்கு வருகைத் தந்து, அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்நுட்பங்களில் உண்டான ஆய்வு படிப்புகளில் கூட்டு முயற்சியாக, தங்களது ஆய்வுகளின் முடிவுகளை அங்கு பகிர்ந்து கொள்வார்கள். இது புதுமையான தீர்வுகளுக்கு ஒரு உந்துகோலாக இருக்கும்
amtveditor@gmail.com Mithran Press Media Association
Flash News

இன்று அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இந்தியாவின் முதல் கத்தி இல்லாத மூளை அறுவை சிகிச்சை MRgFUS-ஐ – அறிமுகப்படுத்தியது

அடிபோ ஆய்வகம் வழங்கும் ADIPOLABS PRESENT

இந்தியா மற்றும் ஜி20: செயலாக்கத்திற்கான திட்டமிடல் – அஜய் சேத் & மைக்கேல் தேபப்ரதா பத்ரா

Dish TV India launches its one-stop OTT entertainment solution – WATCHO OTT plans – “One Hai Toh Done Hai”

GEM மருத்துவமனை OBESICON-Reversing Diabesity

மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு சைக்கிள் பியூர் வழங்கும் கல்வி உதவித்தொகைகள்

சிஎல்ஆர்ஐ தோல் துறையின் திறன் மேம்பாட்டுக்கான ஸ்கேல் செயலியை திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்

GEM HOSPITAL INAUGURATES DEPARTMENT OF OBSTETRICS & EXCLUSIVE WOMEN’S WARD

சென்னை வர்த்தக மையத்தில் மெஷின்ஸ் மெட்டீரியல்ஸ் கண்காட்சி
Tuesday, June 06, 2023