கடலூர் : 20 அதிகாரிகளுக்கு கலெக்டர் நோட்டீஸ்
கடலூர்: மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத 20 அதிகாரிகளுக்கு உத்தரவை மீறியதாக மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்