மூட்டு அழற்சி சிகிச்சை முறையில் புதிய திருப்புமுனை
சென்னை, 20 ஏப்ரல் 2017: மூட்டு அழற்சி மற்றும் அதுதொடர்பான வலிகளால் அவதிப்படும்
நோயாளிகளுக்கு புதிய நவீன திருப்பு முனையை ஏற்படுத்தும் சிகிச்சை முறை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சென்னையில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையின் மூத்த
எலும்பு மருத்துவ சிகிச்சை நிபுணரான டாக்டர் எஸ்.ஆறுமுகம் தலைமையிலான மருத்துவக் குழு
அறிமுகப்படுத்தியுள்ளது.
டாக்டர் ஆறுமுகம் மற்றும் அவர்களது குழுவின் இந்த வகையான புதிய மருத்துவ சிகிச்சையில்
மிகச்சரியான சிகிச்சைகள் முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால், மருத்துவ சிகிச்சையின் போதும்,
சிகிச்சைக்குப் பிறகு உடல் நலன் தேறும் போதும் எந்தவிதமான வலிகளையும் நோயாளிகள் உணராமல்
இருப்பர். அறுவைச் சிகிச்சையின் போது குறிப்பாக உடல் நலன் தேறும் போது ஏற்படும் மிகக்
கடுமையான வலியை இந்த புதிய சிகிச்சை முறை மூலம் நோயாளிகள் தவிர்க்கலாம்.
இந்தப் புதிய நடைமுறையின் மூலம் மூட்டு அழற்சி அதுதொடர்புடைய வலிகளுக்கு சிகிச்சை
அளிக்கப்பட்ட முதல் 48 மணிநேரத்தில் நோயாளிகளால் எந்தவித வலிகளையும் உணர முடியாது.
குறிப்பாக, வழக்கமான மருத்துவ அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்துக்குள்
நோயாளிகள் அதீத வலியை உணர்வார்கள். புதிய நடைமுறையால் இந்த வலி ஏற்படாது.
இந்தப் புதிய முறை மூலமாக, அறுவை சிகிச்சை செய்யும் போது அதனுடைய வலியானது நரம்புகளின்
வலியே செல்வது தடுத்து நிறுத்தப்படும். இதனால், நோயாளிகள் வலியை உணர்வது முற்றிலுமாக
தடுக்கப்பட்டு விடும்.
அறுவை சிகிச்சையின் போது, ரத்தமானது மூட்டுகளுக்குச் செல்லாதபடி பட்டை போன்ற ஒரு
அமைப்பால் இறுக்கமாக கட்டப்பட்டு விடும். இதனால், மூட்டுகளுக்கு ரத்த ஓட்டம் செல்வது
தடுக்கப்படும். இதன்மூலம் அறுவை சிகிச்சையின் போதும், அதற்குப் பிறகும் நோயாளிகளுக்கு வலியை
ஏற்படுத்தாமல் இருக்கும்.
அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, முதல் 48 மணி நேரம் என்பது நோயாளிகளுக்கு மிகவும்
அசெளகர்யமாக இருக்கும். இந்தப் புதிய முறை மூலமாக நோயாளிகளுக்கு எந்த வலியும் இருக்காது.
இதற்காக அறுவை சிகிச்சையின் போதே அவர்களுக்கு மூட்டுப் பகுதியில் ஒரு சிறப்பு மருந்து ஊசி
மூலமாகச் செலுத்தப்படும். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு முதல் 48 மணி நேரத்துக்கு நோயாளிகளுக்கு
ஏற்படும் அதீத வலியை இந்த மருந்து கவனத்துக் கொள்ளும்.
இந்தப் புதிய நடைமுறையானது நோயாளிகள் வலியை உணராமல் இருப்பதற்காக மட்டுமின்றி,
அவர்கள் விரைவில் தங்களது இயல்பான பணிகளைத் தொடரவும் வழிவகை செய்கிறது. வழக்கமான
முறைகளைத் தாண்டி இந்தப் புதிய நடைமுறையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையால் நோயாளிகள்
விரைந்து குணமடைவர். அவர்கள் தாங்களாகவே கழிவறைக்குச் செல்வது, மாடிப் படிகளில் ஏறுவது
போன்ற வழக்கமான பணிகளுக்கு விரைவில் திரும்புவர். சிகிச்சையைத் தொடர்ந்து மருத்துவமனையில்
தங்கும் நாள்களும் மிகக் குறைவாக இருக்கும்.
இந்தப் புதிய நடைமுறை மூலம், சிகிச்சை நடைபெற்ற பகுதிகளில் கட்டுப் போடுவது
அதை நீக்குவது போன்ற வலி ஏற்படுத்தும் விஷயங்களை முழுமையாகத்
தவிர்க்கலாம்.
இறுதியாக, இயன்முறை மருத்துவர்களின் உதவிகளுடன் நோயாளிகள் குறிப்பிட்ட
தசைப் பகுதிகளை விரைவாக இயல்பான நிலைக்கு வர முடியும்.
மூட்டு அழற்சி காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து
வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இதுபோன்று புதிய
நடைமுறையிலான சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
- இந்தியா டுடே- வரும் 2020-க்குள் 180 மில்லியன் பேர் மூட்டு அழற்சியால்
பாதிக்கப்படுவர்.
- டைம்ஸ் ஆப் இந்தியா – 2020-க்குள் அழற்சியால் பாதிக்கப்படுவோரின்
எண்ணிக்கை 20 மடங்கு அதிகரிக்கும். அதில், மூட்டு என்பது பொதுவாக
பாதிக்கப்படும் பகுதியாக இருக்கும்.
- வருங்காலத்தில் மூட்டு பாதிப்புகள் அதிகரித்து வருவதை காட்டும் இந்திய
ஆய்வு அறிக்கைகளில் சில இவையாகும்.
அழற்சியால் பாதிக்கப்படும் நோயாளிகளின் மிக முக்கிய கவலையே அதீத
வலியாகும். இதனை முன்பே கண்டறிந்தால் மருந்துகள் மூலமும், வாழ்க்கை முறை
மாற்றங்கள் வழியாகவும் குணப்படுத்த முடியும்.
சில நோயாளிகளுக்கு மூட்டுப் பகுதிகளில் ஊசிகளைச் செலுத்தி அவர்களை
அழற்சியில் இருந்து மீள்உருவாக்கம் செய்திட முடியும். ஆனால், இந்த முறையில்
மிகவும் மெதுவாகவே பயன் அளிக்க கூடியது.
அதேசமயம், இதுபோன்ற சிகிச்சைகள் பயன் அளிக்காத போது அறுவை சிகிச்சை
என்பது தவிர்க்க முடியாததாகி விடும். இந்த அறுவை சிகிச்சை முறையின் போது
வலி இல்லாமல் இருப்பதும், வலியற்ற சிகிச்சையைப் பெறுவதும் நோயாளிகளுக்கு
முக்கியமான ஒன்றாகும்.