டி.என்.பி.எஸ்.சிக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்

சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜாராம், ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி உட்பட, 11 பேர், 2016 ஜன., 31ல் நியமிக்கப்பட்டனர். இதை எதிர்த்து, தி.மு.க., – எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் உட்பட பலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’11 உறுப்பினர்கள் நியமனம் சட்டப்படி நடைபெறவில்லை. எனவே, அவர்களது நியமனம் செல்லாது’ என, ௨௦௧௬ டிசம்பரில் அறிவித்தனர்.
இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பதவிக்கு, புதிதாக, 11 பேரை நியமிக்க வேண்டும். ஏற்கனவே பதவி வகித்தோரில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி தவிர, மற்றவர்கள் இப்பதவிகளுக்கு மனு செய்யலாம்’ என, உத்தரவிட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *