கனடாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் தோன்றிய 150 அடி உயர ராட்சத பனிப்பாறை
கனாடாவின் கிழற்கு கடைற்கரை பகுதியான நியூபவுண்ட்லாந்து – லேப்ராடோர் பகுதிகளுக்கு இடையில் ஒவ்வொரு கோடைக்காலம் – குளிர்காலத்திற்கு இடையிலான வசந்த காலத்தின்போது ஆர்ட்டிக்கடல் பகுதியில் உள்ள 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பனிப்பாறைகள் நகர்ந்து வருவது இயல்பானது.
பொதுவாக கடலுக்கடியில் அல்லது கடலின் மேற்பரப்பில் மிகவும் சிறிய அளவிலான பனிப்பாறைகள் வெளியில் தெரியும். தற்போது இந்த சீசனின் தொடக்கத்தில் பெர்ரிலேன்ட் கடற்பகுதியில் 150 அடி உயரத்திலான ராட்சத பனிப்றை நகர்ந்து வந்துள்ளனது
இது அப்பகுதியில் உள்ள மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதியில் மிகவும் அருகில் உள்ளதால், அவர்கள் தங்களது கேமராவிற்குள் பனிப்பாறையை படம் பிடித்து வருகிறார்கள்.
அருகில் உள்ள கிராமத்திற்கும் இச்செய்தி பரவியதால், அப்பகுதியி சுற்றுலாத் தளம் போல் மாறியுள்ளது.புவி வெப்பமயமாதல் போன்ற காரணத்தினால் ஆர்ட்டிக் கடற்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வருடம் 387 பனிப்பாறைகள் இதுபோன்று நகர்ந்து வந்துள்ளன. இந்த வருடத்தில் இதுவரை 616 பனிப்பாறைகள் நகர்ந்து வந்துள்ளன. இதுபோன்ற ராட்சத பாறையை நான் இதுவரை பார்த்ததில்லை என்று உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்துள்ளார் அப்பகுதி மேயர் கவனாக் இதுகுறித்து கூறுகையில் ‘‘பொதுவாக தோன்றும் பனிப்பாறையில் நீரில் மிதந்து அப்படியே சென்றுவிடும். ஆனால், இந்த பனிப்பாறை தரையுடன் சேர்ந்து அப்படி நின்று கொண்டிருக்கிறது’’ என்றார்.