தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கரமராஜா
தமிழ்நாடு அனைத்து தொழில்−வணிக அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டை சர்மனி ஹோட்டலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கரமராஜா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.உடன் மாநில செயலாளர் கே.மோகன்,மாநில பொருளாலர் கோவிந்தராஜுலு ,தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேலு உள்ளிட்ட அணைத்து தொழில் வணிக சஙகங்களின் நிர்வாகிகள் திறளாக கலந்து கொண்டனனர்.மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக மே 25 ல் மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு நடத்துவது குறித்தும்,விழுப்புரத்தில மே 5 ல் நடக்க இருக்கும் மாநில மாநாடு அன்றுஅணைத்து தொழில் வணிக நிறுவனங்களுக்கும் விடுமுறை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது