*நேற்று ஒரு சம்பவம்*அம்பத்தூர் நகராட்சி ம ின்வாரிய அதிகாரிகளுக்கு*
அம்பத்தூர் நகராட்சி மின்வாரிய அதிகாரிகளுக்கு
88 வது வார்ட் தெருவிளக்கு சார்பாக அம்பத்தூர் நகராட்சி மின்வாரியத்திற்க்கு
பாடி
88 வது வார்ட் மகாத்மா காந்தி மெயின் ரோட்டில் உள்ள தேவர்நகரில் கடந்த மூன்று மாதங்களாக தெரு விளக்கு எரியாமல் மக்கள் கடும் அவதி
தேவர்நகர் மகாத்மா காந்தி மெயின் ரோட்டில் குழந்தைகள் படிக்கும் இரண்டு பள்ளிகள், டியூசன் சென்டர், ரேசன்கடை, மினிபஸ் பேருந்து நிலையம், கோவில்கள், ஏராளமான கடைகள், அனைத்தும் தேவர்நகர் மகாத்மா காந்தி மெயின் ரோட்டில் இருக்கிறது
நேற்று ஒரு சம்பவம்
ஒரு முதியவர் அவருடைய பேரக்குழந்தையை அந்த வழியாக அழைத்து வந்திருக்கிறார்
இரவில் தெருவிளக்கு இல்லாததால் அங்கு ஒரு கல் இருந்திருக்கிறது
அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கல் மீது வாகனத்தை ஏற்றி நிலை தடுமாறி முதியவர் மேல் இடித்திருக்கிறார் அவருடன் வந்த அவருடைய பேரக்குழந்தைக்கும் அவருக்கும் லேசான காயத்தில் தப்பினார்கள்
இந்த பிரச்சனை பற்றி முதியவரிடம் கேட்ட போது
தெருவிளக்கு எரியாததால் இந்த ரோட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை
இன்று இந்த வாகனம் இடித்தது போல
நாளை இந்த இருட்டில் எந்த பஸ் ஓ அல்லது லாரியோ இடிக்கப்போகிறதோ ? என்று தெரியவில்லை
எதாவது உயிர்பலி ஏற்ப்படும்
முன்
இந்த பகுதி தெருவிளக்கை எரியவைத்தால் நன்றாக இருக்கும் என்று முதியவர் கூறினார்.
அந்த பகுதியில் ஏராளமான கடைகள் இருக்கிறது மின்விளக்கு எரியாத காரணத்தால் அந்த பகுதியில் திருட்டு பயம் அதிகரித்து வருகிறது எந்த நேரத்திலும் இந்த இருட்டை பயன்படுத்தி எந்த நேரத்திலும் திருடர்கள் உள்ளே நுலைவார்கள் என்று தெரியவில்லை
அதே போல் ரோட்டில் பெண்களும் நிம்மதியாக செல்ல முடியவில்லை இந்த இருட்டை பயன்படுத்தி திருடர்கள் எந்த நேரத்தில் கழுத்தில் இருந்து செயினை எடுத்து செல்வார்கள் என்ற பயத்திலே அந்த இருட்டில் செல்கிறார்கள்
உடனடியாக
அம்பத்தூர் நகராட்சி மின்வாரியம்
இந்த 88 வது வார்டில் உள்ள மாகத்மா காந்தி மெயின் ரோட்டில் தெருவிளக்கை உடனடியாக எரிய வைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பணிவான வேண்டுகோள்.