தூத்துக்குடி: இரவு நேர மது விற்பனை செய்யும்போது மோதல்
தூத்துக்குடி: கோவில்பட்டியில் இரவு மது விற்பனை செய்தபோது ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மார்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே இரவு மது விற்பனை நடந்ததாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.இதில் டேவிட்குமார் என்பவருக்கு அரிவாள் வெட்டும் விழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.