4 வது நாளாக தினகரன் போலீசார் முன் ஆஜர்
புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்துள்ள புகாரில், டில்லி குற்றப்பிரிவு போலீசார் முன்பு தினகரன் இன்று 4 வது நாளாக ஆஜரானார்.
கடந்த சனிக்கிழமை முதல் தினகரனிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கைதான சுகேஷ் சந்திரா முன்னிலையில் பல கேள்விகள் கேட்டு போதிய ஆதாரங்கள் பெற்று வருகின்றனர். இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றே கூறப்படுகிறது.