சி.ஆர்.பி.எப்., வீரர் உடல் மதுரை வருகை
மதுரை : சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தன. மேலும் இச்சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 வீரர்கள் பலியாயினர். இவர்களில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த வீரர் அழகு பாண்டி என்ற வீரரின் உடல் விமானம் மூலம் மதரை வந்தது. பின்னர் அவரது சொந்த ஊரான முத்துநாகையாபுரத்திற்கு வந்து சேர்ந்தது. வீரர் அழகுபாண்டி உடலுக்கு அமைச்சர் ஆர்.பி., உதயகுமார் அஞ்சலி செலுத்தினார். மேலும் வீரரின் குடும்பத்தினரிடம் ரூ.20 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.