காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : உளவுத்துறை எச்சரிக்கை
ஸ்ரீநகர்: காஷ்மீரின் பல்வேறு பகுதிகளை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரில் தொடர் வன்முறை நடந்து வருகிறது. இந்நிலையில் உளவுத்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது அதில், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி, காஷ்மீரின் பல்வேறு அரசு கட்டடங்கள், மொபைல் கோபுரங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.