காஞ்சிபுரம்: கூட்டுறவு வங்கி அதிகாரிகள் 3 பேர் கைது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் 3 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக 3 வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு ரூ.3 லட்சம் அளவிற்கு பரிசு பொருள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி மேலாளர் வெங்கடேசன் உட்பட3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமைறைவாகி உள்ள வங்கி தலைவர் சந்திரன் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.