கோடநாட்டில் காவலாளி கொலை: போலீசார் தீவிர விசாரணை
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கும் எஸ்டேட்டிற்குள் வந்த 10 பேர் மர்ம கும்பல் தாக்கியதில் காவலாளி ஓம் பகதூர் என்பவர் மரணமடைந்தார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் என்பவர் காயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், போலீசார் கிருஷ்ண பகதூரை எஸ்டேட் அழைத்து வந்தனர். அங்கு மர்ம நபர்கள் தாக்கியது எப்படி என்பது குறித்து செய்து காட்ட கூறினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.