வீடு வாங்க 90 சதவீத பணம் எடுக்கலாம்: பி.எப்.,
புதுடில்லி: புதிதாக வீடு வாங்க விற்க பி.எப்., தொகையிலிருந்து 90 சதவீதம், ஊழியர்கள் எடுத்து கொள்ள கட்டுபாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பிஎப் கணக்கில் உள்ளவர்கள் 10 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக அமைத்து பதிவு செய்ய வேண்டும். மூன்று வருடங்கள் பி.எப்., பிடித்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் தனியார், பில்டர் அல்லது அரசிடம் வீடு, நிலம், அப்பார்ட்மென்ட்டில் குடியிருப்பு வாங்கலாம். அதற்கான பணத்தை பி.எப்., அமைப்பு நிலம் மற்றும் வீடு விற்பனை செய்பவர்களிடம் நேரடியாக செலுத்தும் . இந்த திட்டத்தை ஒருவர் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.