ரெட்டிகன் 2017, விழித்திரை குறைபாடு மேலாண்மை தேசிய கருத்தரங்கம் இன்று சென்னையில் தொடங்குகியது.

சென்னை, ஏப்ரல் 23, 2017: கண் சிகிச்சை அளிப்பவர்களுக்கு குறிப்பாக கண் விழித்திரை

குறைபாடுகளுக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சைகளை விளக்கும் விதமாக டாக்டர். அகர்வால்'ஸ்

கண் மருத்துவமனை (DR. AGARWAL’S EYE HOSPITAL), இன்று ரெட்டிகன் 2017 (RETICON-2017) என்கிற

கருத்தரங்கை சென்னையில் நடத்துகிறது. தேசிய அளவிலான இந்த விழித்திரை குறைபாடு

மேலாண்மை கருத்தரங்கை, டாக்டர். அகர்வால்'ஸ் கண் மருத்துவமனையின் சேர்மன், நிர்வாக

இயக்குநர் மற்றும் ரெட்டிகன் 2017 நிகழ்வின் இயக்குநர், பேராசிரியர் அமர் அகர்வால்

முன்னிலையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை

அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில், கண் விழித்திரை குறைபாடு

மேலாண்மை குறித்து, மருத்துவர்கள் தங்களின் சிறந்த சிகிச்சை முறைகள், ஆராய்ச்சி மற்றும்

புதுமைகளை பகிர்ந்துக் கொள்கிறார்கள். இந்தக் கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து சுமார்

300-400 மருத்துவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன முறையில் ஸ்கேனிங் செய்து விழித்திரை குறைபாட்டை கண்டறிந்து, ஆரம்ப நிலையிலே

அதற்கு சிகிச்சை அளிப்பதை விழித்திரை நிபுணர்கள் உறுதி செய்து வருகிறார்கள். இது பல்வேறு

தரப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அறிவின் அடிப்படையில் மேம்பட்டிருக்கிறது. நாள்பட்ட கண்

சிக்கல்களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் கண் பார்வையை திரும்பப் பெறும் புதுமையான

முறைகளுக்கு இந்தக் கருத்தரங்கம் முக்கிய காரண கருவியாக இருக்கும் என நம்புகிறேன்."

என்றார்.

விழித்திரை குறைபாடுகள் நாட்டில் அதிகரித்து வருகிறது. நாட்டு மக்களில் இத்தனை 10-12%

சதவிகிதம் பேருக்கு விழித்திரை குறைபாடுகள் இருக்கின்றன. மிகச் சரியான விழித்திரை

குறைபாடு மேலாண்மை என்பது இப்போதும் ஒரு கவலை அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது.

அந்த வகையில் ஆராய்ச்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

டாக்டர். அகர்வால்'ஸ் கண் மருத்துவமனையின் சேர்மன், நிர்வாக இயக்குநர் மற்றும் ரெட்டிகன் 2017

நிகழ்வின் இயக்குநர், பேராசிரியர் அமர் அகர்வால் பேசும் போது,'' அறிவு சார்ந்த விஷயங்களை

மட்டும் பகிர்ந்து கொள்வது எங்களின் நோக்கம் அல்ல. குணப்படுத்தக் கூடிய கண் குறைபாடுகளுக்கு

எதிராக மருத்துவர்களை செயல்பட வைப்பதாக இந்தக் கருத்தரங்கம் இருக்கிறது." என்றார்.

இந்த ஒரு நாள் நிகழ்வில் அறிவியல் ரீதியான விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. மேலும். கண்புரை

முதல் முதிராநிலை விழித்திரை வரை பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடக்கின்றன.

மேலும், 27 ஜி விட்ரெக்டொமி மூலம் தசை அறுவை சிகிச்சை நீரிழிவு நோயாளிகளுக்கு கண்புரை

சிகிச்சை, விழித்திரை விலகல், விழித்திரை அழற்சி பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

இந்தக் கருத்தரங்கில் டாக்டர் ராகுல் குரானா சிறப்புரையாற்றுகிறார். இவர், அமெரிக்காவிலுள்ள

வடக்கு கலிஃபோர்னியா ரெட்டினா விட்ரீயஸ் அசோசியேட்ஸ்-ன் பங்குதாரர், அமெரிக்காவின் சான்

ஃப்ரான்ஸிஸ்கோ -ல் உள்ள சான் ஃப்ரான்ஸிஸ்கோ பல்கலைக்கழகத்தில் கண் சிகிச்சை பிரிவு

உதவி பேராசிரியர், அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆத்தமாலஜி ஆத்தல்மிக் நியூஸ் அண்ட்

எஜூகேஷன் நெட் ஒர்க்-ன் தலைமை ஆசிரியர் ஆக உள்ளார்.

இந்தக் கருத்தரங்கில், ஆர்வத்தை தூண்டும் போட்டி ஒன்று, கண் சிகிச்சை பிரீமியர் லீக் (OPHTHALMIC

PREMIER LEAGUE – OPL) என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதில், நான்கு அறுவை சிசிச்சை குழுக்கள்,

ஒவ்வொரு குழுவிலும் 4 மருத்துவர்கள் இடம் பெற்றிருப்பார்கள். அவர்கள், அவர்களின் ஆர்வத்தை

தூண்டும் மற்றும் சவாலான அறுவை சிகிச்சை வீடியோக்களை காட்சிப்படுத்துகிறார்கள். இதில்

சிறப்பான குழுவுக்கு கோப்பை வழங்கப்பட இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *